Oktober 2, 2022

இலங்கைக்கு செல்வதனை தவிர்க்குமாறு பிரித்தானியா சுற்றுலா பயணிகளிடம் அறிவிக்குமாறு கோரிக்கை…!!!

இலங்கைக்கு செல்வதனை தவிர்க்குமாறு பிரித்தானியா சுற்றுலா பயணிகளிடம் அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா பாராளுமன்ற உறுப்பினர் ரூபா கத், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சரிடம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

இலங்கையில் யானைகள் கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதால், அங்கு செல்ல வேண்டாம் என தமது நாட்டு சுற்றுலா பயணிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

உஸ்வெவ பிரதேசத்தில் யானை குட்டிகள் உட்பட 280 யானைகள் கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியா மிருக சித்திரவதைக்கு எதிரான அமைப்புகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இலங்கை செல்லும் பிரித்தானியா சுற்றுலா பயணிகள், அங்கு யானைகள் சித்திரவதைக்கு உட்படுகின்றதா என பிரித்தானியா அரசாங்கத்திடம் அறிவிக்குமாறு சுற்றுலா பயணிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.