Oktober 3, 2022

அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம்…!!

ஐ.நா.வுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இவர் எதிர்வரும் வாரம் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வாழ்வில், 30 ஆண்டுகளை நிதி அமைச்சர் மங்கள சமரவீர நிறைவு செய்வதை முன்னிட்டு கொழும்பில் நடைபெறவுள்ள நிகழ்வில் பங்கேற்கவே சமந்தா பவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்த நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி பிற்பகல் 3 மணியவில் நடைபெறவுள்ளது.

இராஜதந்திரியும், கல்வியாளருமான சமந்தா பவர், பராக் ஒபாமாவின் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.