aடென்மார்கில் வாழ்ந்து வரும் அன்னலிங்கம் ராஐினி இருவரும் இல்லற பந்தம் இணைந்து  திருமண நாள் தன்னை சிறப்பாக கொண்டாடுகின்றனர்.

இவர்கள் வாழ்வில் மற்றவர்கள் வாழ்த்தக் கூ‌டியதாக, போற்றக் கூடியதாக, இணைந்த காலங்களில் இருந்து இணைந்து தங்கள் உற்றார் உறவினர் நலனில் பங்கு கொண்டு ஏன் அவர்கள் வாழ்கையை நிதி உதவியால் உயர்தி தாங்கள் மட்டும் தனித்து சிறப்புறாது உறவுகளையும் உயர்தி விட்டு வாழும் தம்பதிகள் மட்டுமல்ல பொதுப்பணி, ஆலயப்பணி, என்று தங்கள் வாழ்வை தங்கள் நேரத்தை பயன்படுத்தும் நல்ல மனம் கொண்ட  தம்பதிகள் ஆவார்கள்.

இவர்கள் திருமணநாள்சிறப்பாக நடைபெற உள்ளது இவர்களை வாழ்தும் பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் இந்த இணையத்தினரின் வாழ்த்துகளும் உருத்தாகட்டும்,

அன்பென்ற ஊற்றிலே நனைந்திடும் உறவுகள்
ஆனந்த மழையிலே ஊற்றான இணைவுகள்
அனைத்து வாழ்வதில் அன்றில் பறவைகள்
ஆயிரம் காலங்கள் வாழ்திடும் உறவுகள்

சிரித்த முகத்துடையார்
சிந்தித்து பேசிடுவார்
‌சினம் கொண்டு மற்ரோரை
சினந்திடாக் குணமுடையார்

பணம் கண்டும் பகட்டில்லா
பன்புள்ள அன்பு உள்ளங்கள்
பார்தாலே முகம் தனில்
சிரிப்பென்ற அகல் விளக்குகள்

இல்லறத்தில் இருபத்தைந்து
இணைந்த வாழ்கைபோல்
இனிவரும் காலமும்
இணைந்துவாழ்கவென
நல்லுறவே கொண்டு
வாழ்தி நிற்கிறோம்.

வாழ்த்துக்களுடன் நண்பர்கள் இசைக்கவிஞன் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா குடும்பத்தினர்:
தயா குடும்பத்தினர்
நாகேஸ் வரன் குடும்பத்தினர்
தேவராாை குடும்பத்தினர்
மகிந்தன் குடும்பத்தினர் :

 

                                      திருமண பந்த வெள்ளிவிழா;

லிங்கம் ராஜினி – நல்

லினிய வாழ்வினில் – வெள்ளி விழாவாம்

கண்டவுடன் காதல் – ஜேர்மன்

டென்மார்க் புகைவண்டி தேடல்

கருத்தினில் அன்பு மோதல்

காலமெல்லாம் இன்பமுற வாழ்தல்

.புயல் போல் வந்த துன்பங்களை

புன்னகையால் துரத்தி

மயிலிறகாய் வாசித்தீர்கள்

வாழ்க்கைக் கவிதை

நல்லறம் பேணி

இலக்கியத்தை போன்றதொரு

இணையற்ற ஜோடி

இல்லறத்தில் கூடி

இருபத்தைந்து வருடத்தை நாடிய பொழுதில்

இணையற்ற வாழ்த்துக்களால்

கவி பூ சூடி வாழ்த்துகிறோம்

இணுவையூர் கவிஞர் சக்திதாசனின் குடும்பத்தினர்