September 29, 2022

இலங்கை – இந்­தி­யக் கடல் எல்­லை­யில் இரு நாட்­டுக் கடற்­ப­டை­யி­ன­ரும் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக இரு நாட்டு மீன­வர்­க­ ளை­யும் நடுக் கட­லில் கைது !!!

இலங்கை – இந்­தி­யக் கடல் எல்­லை­யில் இரு நாட்­டுக் கடற்­ப­டை­யி­ன­ரும் ஏட்­டிக்­குப் போட்­டி­யாக இரு நாட்டு மீன­வர்­க­ ளை­யும் நடுக் கட­லில் கைது செய்­த­மை­யால் கடற்­ப­ரப்­பில் நேற்­றுமுன்தினம் பதற்­றம் ஏற்­பட்­டது.

இலங்கை– இந்­தி­யக் கடற்­ப­டை­யி­னரால் நேற்றுமுன்தினமிரவு இரு நாடு­க­ளுக்­குள்­ளும் அத்­து­மீறி நுழைந்து மீன்­பி­டி­யில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டில் மீன­வர்­க­ள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலை­யில் இலங்­கைக் கடற்­ப­ரப்­புக்­குள் வைத்­துக் கைது செய்­யப்­பட்ட 13 இந்­திய மீன­வர்­கள் காங்­கே­சன்துறை கடற்­படை முகா­முக்கு நேற்­றுக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­னர்.

அவர்­கள் யாழ்ப்­பா­ணம் நீரி­யல்­வ­ளத் துறைத் திணைக்­கள அதி­கா­ரி­க­ளி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்டு நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­னர்.

அதே­நே­ரம் இந்­திய மீன­வர்­க­ளால் 16 இலங்கை மீன­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர். இந்த ஏட்­டிக்­குப் போட்­டி­யான கைது­க­ளால் இரு­நா­டு­க­ளின் கடற்­ப­ரப்­பில் நேற்­றுப் பதற்­றம் இருந்­தது.