Oktober 3, 2022

முள்ளிவாய்கால் நினைவேந்தல் அறிவிப்பு! அரசியல் வாதிகளுக்கு இடமில்லை!.

முள்ளிவாய்கால் நினைவேந்தலை அனுஷ;டிப்பதற்கான ஏற்பாடுகளை மாணவர் ஓன்றியத்தின் ஒருங்கமைப்புக்குள் ஒருமித்து முள்ளிவாய்க்கால் குழு ஒன்றினை அமைத்து ஓரணியில் அனுஷ;டிக்க வேண்டும் என யாழ் பல்கலைக்கழகம் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு கல்லடியிலுள்ள வொய்ஸ் ஓப் மீடியா யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய செயலாளர் எஸ்.பி.எஸ்.பபிராஜ். கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களஒன்றிய தலைவர் ஆகியோர் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தனர்.

யாழ் பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றினைந்து 30 வருட கால ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுற்றுள்ள போதிலும் எமது சமூகத்துக்குள் பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்குள் நாங்கள் முள்ளிவாய்கால் நினைவேந்தலை செய்துவருகின்றோம். அந்த நினைவேந்தலை கடந்த வருடத்தில் எல்லோரும் ஒருமித்து ஓரணியில் செய்வதற்கு மாணவர் ஒன்றியம் செயற்பட்டது

இம்முறையும் மாணவர் ஓன்றியத்தின் ஒருங்கமைப்புக்குள் ஒருமித்து முள்ளிவாய்க்கால் குழு ஒன்றினை அமைத்து ஓரணியில் அனுஷ;டிக்க வேண்டும் என்பது மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாடு அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் மாணவர்கள் ஆகிய நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பாக கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ளோம்

அரசியல் வாதிகள் மே 18 நெருங்குகின்ற காலப்பகுதியில் மாத்திரம் அந்த விடயத்தினை துக்கி பிடிக்கின்றனர். எனவே அவர்கள் சார்பான குழுக்கல் ஊடாக முள்ளிவாய்கால் நினைவேந்தலை ஒழுங்கு செய்யப்பட வேண்டும் என்பது ஒரு மடமைத்தனமானது

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு நிகழ்வல் பங்கு பற்றியபோது யுத்த குற்றம் இரண்டு தரப்பிலும் மேற்கொள்ளப்பட்டதாகவும் இழப்புக்கள் இரண்டு தரப்பகிலும் இடம்பெற்றுள்ளது எனவே அதனை மறப்போம் மன்னிப்போம் என்ற அடிப்படையில் அதனை விட்டு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற அடிப்படையில் தெரிவித்தார்.

இதில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட எமது அரசியல்வாதிகள் பங்கு கொண்டபோதும் அந்த கருதத்திற்கு மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த போக்கில் இருக்கின்ற எமது அரசியல் தலைமைகள் எல்லாரும் சேர்ந்து அவர்கள் முள்ளிவாய்கால் நினைவேந்தலை அனுஷ;டிப்பதாக இருந்தால் இது மனித படுகொலையின் சாட்சியாக வெளிச் சமூகத்திற்கு தெரியாது.

யுத்தம் முடிந்து 10 ஆண்டுகளாக சர்வதேச விசாரணை தேவை என கோரிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் சர்வதேச விசாரணைக்காக எந்த ஒரு அடித்தளமும் இடப்படவில்லை. கால அவகாசம் கொடுத்துவருகின்றனர். இந்த கால அவகாசம் கொடுக்கப்பட்டு எதுவிதமான நன்மையும் இல்லாத சூழ்நிலையில் மீண்டும் ஜெனீவா கூட்டத் தொடர் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த நிலையில் மீண்டும் ஜெனீவா கூட்டத் தொடர்ரில் இலங்கைக்கு சார்பான நிலைப்பாடு எடுக்கப்படும.;

அதற்கு எமது சமூகம் சார்ந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு சரியான முடிவை எடுக்கப்படும் என்பது கேள்விக்குறியாக இருக்கின்ற நிலையில் இந்த முறை பொதுச் சுடர் எற்றுவதை முற்று முழுதாக அரசியல்வாதிகளுக்கு வழங்கப்படாது கொல்லப்பட்டவர்களின் உறவுகளான பொது மகனால் பொதுச் சுடர் ஏற்றப்படும்.

ஆனால் அரசியல் வாதிகள் நினைவேந்தலில் பங்குகொள்ள முடியும் அதேவேளை தமது தலைமையிலே தாம் முன்னின்று செய்வதை அனுமதிக்க முடியாது. முள்ளிவாய்கால் நினைவேந்தலை வடக்கு கிழக்கில் செய்கின்ற தரப்புக்கள் அனைவரும் எம்மோடு சோர்ந்து ஒரு முள்ளிவாய்கால் குழு ஒன்றை அமைத்து அந்த குழு ஊடாக செய்யப்படவேண்டும.;

2015 ம் ஆண்டு தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் புறக்கணித்தது அந்த நிலையில் 2017 கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்த கால அவகாசம் மாச் 24 ம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது இந்த நிலையில் அடுத்த கட்டமாக நாம் என்ன செய்யவேண்டும். எவ்வாறான தீர்மானத்தை கோருவதற்கான அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பதாக தமிழ் அரசியல் வாதிகளிடம் ஒரு அக்கறையான நிலைப்பாடு இருப்பதாக தெரியவில்லை

ஆகவே யாழ் பல்கலைக்கழ மாணவர் ஒன்றியமும் கிழக்கு பல்கலைக்கழக ஒன்றியமும் பொது அமைப்புக்களையும் உள்ளீர்த்து ஒரு மக்கள் மயப்படுத்தப்பட்ட போராட்டம் ஒன்றை மேற்கொள்ளுவதற்கும.; அந்த போராட்டத்தில் மகஜர் ஒன்றினை தயாரித்து அதனை வெளிநாட்டு தூதரகங்களுக்கு சமர்ப்பிப்பதன் மூலமாக இந்த இனப்படுகொலைக்கு எவ்வாறாதொரு சர்வதேச விசாரணை தேவை என்பது தொடர்பானதொரு பொறிமுறை ஜெனீவா மனித உரிமையத்தில் உருவாக்கப்பட்டு அதனூடாக யுத்த குற்றங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை தூதரகங்களுக்கு சமர்ப்பிப்பதாக தீர்மானித்துள்ளோம். ஏன்றனர்.