Oktober 2, 2022

இலங்கையை சுற்றிவந்த மாற்றுத்திறனாளிக்கு அமோக வரவேற்பு!

தமிழ் மாற்றுத் திறனாளிகள் அமைப்பின் ஏற்பாட்டில் நாடு பூராகவும் செல்லும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட இப் பயணமானது 1400 கிலோ மீற்றர் தூரம் சென்று வந்த நிலையிலையே முடிவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளியான முகமட் அலி என்பவர் கடந்த முதலாம் திகதி இந்தப் பயணத்தை யாழில் ஆரம்பித்திருந்தார்.

யாழிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பயணம் கொழும்பு காலி மாத்தறை என நாட்டின் பல பாகங்களுக்கும் சென்று 15 ஆவது நாளான நேற்று யாழ்ப்பாணத்தில் முடிவடைந்திருந்த நிலையில் இன்றைய தினம் முகமட் அலிக்கு வவுனியாவில் அமோக வரேவேற்பு இடம்பெற்றது.

இதன் போது தனக்கு ஆதரவை வழங்கிய தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கும் அத்தோடு ஊடகங்களுக்கும் இதனை ஏற்பாடு செய்த அமைப்பிற்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்துள்ளார். மேலும் தனது கோரிக்கைகள் தொடர்பில் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்காக தான் காத்துக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்வின் இறுதியில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் சொந்த நிதியில் இருந்து மாற்றுத்திறனாளியான முகமட் அலிக்கு 850,000 ரூபா பெறுமதியான முச்சக்கரவண்டியோன்று வழங்கி வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நாட்டிலுள்ள சமூகங்களுக்கிடையே நல்லுறவையும் சமாதானத்தையும் ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தியும் மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் கோரியும் நாடு பூராகவும் செல்லும் வகையில் மாற்றுத்திறனாளியான முகமது அலியினால் இப்பயணம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.