September 28, 2022

கிளிநொச்சி மாவட்டம் மீள் வாழ்வளிக்கும் நிகழ்ச்சி

கிளிநொச்சி மாவட்டம்

உலக வாழ் தமிழ் மக்கள் அனைவருக்கும் சுசிலன் பவுண்டேசனின் இனிதான வணக்கங்களை தெரிவித்துக்கொண்டு நெதர்லாந்து கொலண்டில் வசிக்கும் திரு சுசிலன் அண்ணாவின் சுசிலன் பவுண்டேசன் இன் மீள் வாழ்வளிக்கும் நிகழ்ச்சி திட்டத்தின் ஊடாக நாடு கடந்து வாழும் எம் புலம் பெயர் உறவுகள் எம் தாயகத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளினால் பாதிக்கப்பட்டு பல இன்னல்களை அனுபவித்திக்கொண்டிருக்கும் எமது தாயக உறவுகளுக்கு உதவிடும் நோக்கில் தெர்லாந்து நாட்டில் வசிக்கும் திரு நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்கள் சுசிலன் பவுண்டேசன் ஊடாக கிளிநொச்சி மாவட்டத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் ஒரு குடும்பத்திற்கு வாழ்வாதார உதவியினை சுசிலன் பவுண்டேசன் உறுப்பினர்கள் ஊடாக வழங்கி வைத்துள்ளார்கள் .

இந்த உதவியினை செய்த நெதர்லாந்து நாட்டில் வசிக்கும் திரு. நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நன்றிகளையும் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் சுசிலன் பவுண்டேசன் பெருமையடைகின்றது இவ்வாறான உதவிகள் எமது தாயக உறவுகளுக்கு தேவையாக காணப்படுகின்றது. அதனை வழங்கி வைத்த சிவசுப்பிரமணியம் குடும்பத்தாருக்கு நன்றிகள். சுசிலன் பவுண்டேசன் ஆனது 2009 ஆம் ஆண்டு முதல் திரு சுசிலன் அவர்களின் சொந்த நிதியில் தாயக உறவுகளுக்கு பல்வேறு வகையான உதவி திட்டங்களை வழங்கி வைத்து வந்துள்ளனர் வருகின்றனர் . இந்த நிலையில் பல்வேறு புலம்பெயர் உறவுகளின் வேண்டுகைக்கு இணங்க அவர்களின் உதவி திட்டங்களும் சுசிலன் பவுண்டேசன் ஊடாக வழங்கி வைக்கப்படுகின்றது. அதன் முதற்கட்டமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கரந்தாய் கிராமத்தை சேர்ந்த அருள்முருகன் வசந்தகுமாரிக்கு வாழ்வாதாரமாக ஆடுகள் வழங்கி வைக்கப்ட்டுள்ளது. இதனை கொண்டு அவர் தமது வாழ்வாதாரத்தை பெருக்குவதுடன் அவர்களின் பிள்ளைகளின் கல்வி நிலையும் உயர வேண்டும் என பிரார்த்திப்பதுடன் இந்த உதவியை வழங்கிய திரு. நாகலிங்கம் சிவசுப்பிரமணியம் அவர்களுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் சுசிலன் பவுண்டேசன் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றது

நன்றி.