September 29, 2022

மைத்திரி இறுதி நேரத்தில் எடுத்த திடீர் முடிவு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய மட்டக்களப்பிற்கான விஜயம் இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம், ஜனாதிபதி தலைமையில் இன்று காலை இடம்பெறவுள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் இறுதி நேரத்தில் ஜனாதிபதியின் மட்டக்களப்பிற்கான விஜயம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதியின் விஜயம் இரத்து செய்யப்பட்டமைக்கான காரணம் எதனையும் ஏற்பாட்டு குழுவினர் வெளியிடவில்லை என மேலும் தெரிவிக்கப் படுகிறது.