Oktober 2, 2022

பரபரப்பான ஆட்டத்தில் வென்றது பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி…!!

கரணவாய் கொலின்ஸ் விளையாட்டு கழகம் நடாத்தும் King of jaffna தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் மெலிஞ்சிமுனை இருதயராஜா அணியை எதிர்த்து பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணி மோதியது.

ஆட்ட நேர முடிவில் 01:00 என்ற கோல் கணக்கில் அன்ரனீஸ் அணி வெற்றி பெற்று லீக் சுற்றில் முதலாவது வெற்றியை பதிவு செய்தது.

அன்ரனீஸ் அணி சார்பாக கிறோசான் ஒரு கோலை பெற்று கொடுத்தார்.

பாஷையூர் சென்.அன்ரனீஸ் அணிக்கு எமது வாழ்த்துக்கள்.