September 29, 2022

த.ஒ.குழு மற்றும் மக்களவை நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் !

த.ஒ.குழு மற்றும் மக்களவை விடுக்கும் அறிவித்தல்!!

சிறிலங்காவின் 71 வது சுதந்திரதின நாளை புறக்கணித்து நோர்வே நாடாளுமன்றத்தின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் !

சிறிலங்காவின் 71 வது சுதந்திரதின நாளை புறக்கணித்து நோர்வே நாடாளுமன்றத்திற்கு முன்பாக வரும் திங்கட்கிழமை (04.02.2019) மாலை 18:00 -19:00 மணிவரை கவனயீர்புப் போராட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

சிறீலங்காவிற்கு 71 வது ஆண்டு சுதந்திரதின நாள்
தமிழர்களுக்கு 71 ஆண்டுகால துயர்சுமந்த அடக்குமுறை வாழ்வை வெளிப்படுத்தும் நாள்.

தமிழின அழிப்பை மேற்கொண்ட அரசை நீதியின் முன் நிறுத்தவும்
தமிழினத்தின் சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்து தமிழர்கள் சுதந்திரமாக வாழும் சூழலை ஏற்படுத்தித் தரவேண்டுமெனவும் கோரி நோர்வே வாழ் தமிழர்களாகிய நாம் அனைவரும் ஒன்று திரண்டு உலக அரங்கிடம் உரிமைக்குரலெழுப்புவோம்

அனைவரையும் இந்த கவனஈர்ப்புப் போரட்டத்தில் வந்து கலந்து கொள்ளுமாறு அழைக்கிறோம்.

ஒழுங்கமைப்பு
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு
நோர்வே ஈழத்தமிழர் அவை
Vennligt send videre!