September 28, 2022

தகவல் அறிந்தால் அறிவிக்கவும்! இலங்கை மக்களுக்கு விசேட அறிவிப்பு

 

இலங்கையில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ளவர்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு, தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

குடியவரவு குடியகல்வுத் திணைக்களம் இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தத் தொலைபேசி இலக்கத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் தொடர்புகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திணைக்களத்தின் விசாரணைப் பிரிவின் பிரதி நிர்வாக அதிகாரி எம்.ஜி.வி. காரியவசம் இதனை தெரிவித்துள்ளார்.

011-574 99 99 என்ற தொலைபேசி இலக்கம் 24 மணித்தியாலங்களும் செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.