September 29, 2022

திடீர் மாயமான இலங்கை சிறுமி! அதிர்ச்சியில் பொலிஸார்

புத்தளம் – கருவலகஸ்வெவ – நீலபெம்ம பகுதியில் நான்கு வயது சிறுமி காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த சிறுமியை தேடும் நடவடிக்கை இன்று 3 ஆவது நாளாகவும் தொடரவுள்ளது.

நேற்று முன்தினம் குறித்த சிறுமி வீட்டில் இருந்தவாறு காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறுமி காணாமல் போகும் போது வீட்டில் அவரது தாத்தா மாத்திரமே இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்கு அருகில் உள்ள கலா ஓயாவிற்கு சென்றிருந்த நிலையில், சிறுமி கூச்சலிடும் சத்தம் கேட்டு மீண்டும் திரும்பி வந்து போது அவர் காணாமல் போயிருந்ததாக தாத்தா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் சிவில் பாதுகாப்பு படையணி மற்றும் பிரதேசவாசிகளும் இணைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.