Oktober 1, 2022

சுவிஸ் லுசேர்ண் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சுவிஸ் மத்திய மாநிலமான லுசேர்ன் ,2017 இல் குடும்பவருமானம் 54000 பிராங்குகளுக்கு மேல் இருந்தால் மருத்துவக்காப்புறுதி மானியம்(Premiumverbilligung)வழங்குவதில்லை எனும் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது.இதேபோல் 2018 இல் 60000 பிராங்குகள் என அதிகரித்தது,இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.இத்தீர்மானத்திற்கெதிராக
லுசேர்ன் மாநில நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ,மாநில அரசுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கப்பட்டது,இதனை எதிர்த்து மத்திய (சமஸ்டி)நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மக்களுக்கு ஆதரவான தீர்ப்பு வழங்கப்பட்டது.இதன் மூலம் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பெரும் நன்மையைப்பெறவுள்ளனர்.
2017,2018 இல் மறுக்கப்பட்ட மருத்துவக்காப்புறுதி மானியத்திற்காக பெப்ரவரி முதல் ஒக்டோபர் மாதம் வரை மக்கள் விண்ணப்பிக்கும் உரிமை கிடைத்துள்ளது.
வருமானம் 74154 சுவிஷ் பிராங்குகளுக்குக் குறைவாகப் பெறும் லுசேர்ன் வாழ்க் குடும்பங்களுக்கு மிக்க மகிழ்சியை இந்தத் தீர்மானம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு
அழையுங்கள் 0798000100.

-கல்லாறு சதீஷ்-