வவுனியாவில் ஏழை பெண்ணின் கண்ணீரை துடைத்த இளைஞர்கள்

  இலங்கை, தலைப்புச் செய்திகள், வவுனியா வவுனியாவில் ஏழை பெண்ணின் கண்ணீரை துடைத்த இளைஞர்கள் கோவில்குளம் பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர் தனது வறுமை காரணமாக பிள்ளைகளின் கல்வி செலவிற்காகவும் நுன்நிதி நிறுவனத்திடம் பெற்றுக்கொண்ட கடனை திரும்ப கொடுக்கவும் வீதியில் தயிர் விற்று தனது வாழ்க்கையை கொண்டு நடத்துகிறார் இவரை பற்றி எமது ஊடகத்தில் கடந்த 17.08.2018 அன்று “வவுனியா ஏழை பெண்ணின் கண்ணீர் கதை” என்ற தலைப்புடன் வெளியான ஊடக அறிக்கையினை அடுத்து எமது வாசகர் பெருமக்களில் ஒருவரான சுவிஸ் நாட்டில் வசிக்கும் சுதர்சன் அருனகிரிநாதன் எனும் சமூக அக்கறை கொண்ட இளைஞன் குறித்த பெண்ணின் கடணை துடைப்பதற்கு 30.000பணத்தினை உதவி தொகையாக அனுப்பி வைத்துள்ளார் மேலும் குறித்த பணத்தொகையினை எமது ஊடகத்தின் பிரதான செய்தி ஆசிரியர் ப.கார்த்தீபன் அவர்கள் நேரில் சென்று அப்பெண்ணிடம் வழங்கி வைத்துள்ளார் குறித்த பணத்தொகையினை அனுப்பிய சுதர்சன அவர்கட்கு எமது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் குறித்த தகவலை செய்தியாக்கிய எமது ஊடக நண்பர்களான பாஸ்கரன் கதீசன் மற்றும் பாலேந்திரன் சதீசன் ஆகியோருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறது “உலக தமிழர்களின் தேசிய ஊடகமான” தமிழ் தேசிய செய்திகள் இதேவேளை குறித்த பெண்ணை சந்தித்த சிறிரெலோ இளைஞரணியினர் அப்பெண் வாடகை வீட்டில் வசித்துவருவதை அறிந்து சிறிரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் பணிப்பின் பெயரில் நிரந்தர வீடு அமைப்பதற்கு 2பரப்பு காணி வழங்கயதுடன் அதில் தற்காலிக வீடு ஒன்றை அமைப்பதற்கு உதவுவதாகவும் உறுதியளித்துள்ளனர் சிறிரெலோ இளைஞரணிக்கும் கட்சி செயலாளர் ப.உதயராசா அவர்கட்கும் எமது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தமிழ் தேசிய செய்திகள் தெரிவிக்கின்றது இது தொடர்பான எமது முன்னைய செய்தி அறிக்கையை காண கீழ் உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

இந்த செய்தி தமிழ்த்தேசிய செய்திகள் இணையத்திலிருந்து பிரதிசெய்யப்பட்டது https://www.tnn.lk/archives/50901 .

தாயகச்செய்திகள்