சிங்கள மகாவித்தியாலயம் வேண்டும்:தயாராகின்றது ரணில் ஆமி!

தற்போதுள்ள இலங்கை இராணுவத்தின் முகாமை இடமாற்றாது புதிய இடத்தில் சிங்கள மகாவித்தியாலயத்தில் அதனை நடத்தஆலோசிக்கப்படுகின்றது.
முகாமை அகற்றும் சிந்தனை எமக்கில்லை. எமக்கு இராணுவமுகாம் அவசியம். வாடகைக்கு இடத்தை பெற்று ஆரம்ப பிரிவு வகுப்பை நடத்த எண்ணியுள்ளோம். அவை தொடர்பாக யாழ்ப்பாண இராணுவ கட்டளைத்தளபதியுடன் பேசினோம்.அவர் மிக சந்தோசமடைந்தார். தேவையானவற்றை வழங்கவும் உடன்பட்டார். முதலில் பாடசாலையை ஆரம்பித்து முன்னேற்றத்தை எடுத்துக்காட்டிய பின்பு தேவையான உதவிகளை கல்வித்திணைக்களத்திடம் இருந்து பெறுவோமென சிங்கள மகா வித்தியாலய பழைய மாணவர் சங்கத்தலைவர் கெனடி சேவியர் தெரிவித்துள்ளார்.

இன்று கும்பலொன்று சிங்கள மகாவித்தியாலத்தை மீளத்திறப்பதென்ற கோரிக்கையுடன் யாழ்.பிரதேச செயலகத்தில் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது.

சத்தம் சந்தடியின்றி சிங்கள விகாரைகளை யாழ்;ப்பாணத்தில் நிறுவத்தொடங்கியுள்ள ரணில் அரசு மறுபுறம் தற்போது சிங்கள மகாவித்தியாலய விவகாரத்தை கையிலெடுத்துள்ளது.

முன்னதாக சிங்கள மகாவித்தியாலயத்தில் இயங்கிவரும் படைமுகாமை யாழ்.கோட்டையினுள் நகர்த்தும் திட்டத்துடன் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே திட்டங்களை வகுத்து செயற்பட்டுவந்திருந்தார்.

எனினும் கோட்டையில் படைமுகாம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதையடுத்து தற்போது சிங்கள மகாவித்தியாலயத்தை பழைய மாணவர்கள் பெயரில் திறக்க நகர்வுகள் ஆரம்பமாகியுள்ளது.

Allgemein