கண்ணீர் அஞ்சலிநோத்ராஜ் (நோதன்) (14.08.18)

கண்ணீர் அஞ்சலி
எமது வேலணை ஊரைச் சேர்ந்த விநோத்ராஜ்
(நோதன்) அவர்கள், இன்று(14.8.18) அதிகாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் , இலண்டனில் காலமானார் என்ற செய்தியை , ஆறாத்துயருடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
குயில் பாட்டு மேடை நிகழ்ச்சியில்
அறிவிப்பாளராவும் மற்றும் வேலணை மத்திய மகாவித்தியாலய பழையமாணவர் நிகழ்ச்சிகள்வேலணை ஒன்றியம் நிகழ்ச்சிகள் என பல நிகழ்ச்சிகளை
தொகுத்துவழங்கிய ஒரு
நல்ல மனிதர் அறிவிப்பாளர் ஈலிங் அம்மன் தேரில் கூட வந்து என்னோடு கதைத்து விட்டு எனக்கு போன் அடிப்பதாக சொல்லிவிட்டு சென்றார்.
இந்த துயரமான செய்திகேட்டு நான்
அதிர்ச்சியடைகிறேன்.
அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
அவருடைய ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டுகிறேன்.
ஓம் சாந்தி.

பாலரவி இலண்டன்

துயர் பகிர்தல்