இரண்டு யானை தந்தங்களுடன் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியா கனகராயன்குளம், பகுதியில் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கைப்பற்றப்பட்ட யானை தந்தங்களையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் நேற்றைய தினம் இரவு கனகராயன்குளம் பொலிஸாரிடம் விசேட அதிரைப்படையினர் ஒப்படைத்துள்ளதுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில், இன்றைய தினம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பபடவுள்ளதாகவும் தெரியவருகிறது.