துயர் பகிர்தல் “வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் இறைவனடி சேர்ந்தார்

 

வாழ்நாள் சாதனையாளர்”கவிஞர் வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 80வது வயதில் இறைவனடி சேர்ந்தார்-விபரங்கள் இணைப்பு!
யாழ் தீவகம் வேலணை கிழக்கைப்பிறப்பிடமாகவும்-டென்மார்க்கை வசிப்பிடமாகவும் கொண்ட-சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையின் தாபகரும் சிறந்த கவிஞரும்,தமிழ்பற்றாளருமாகிய, வேலணையூர் பொன்னண்ணா அவர்கள் 26.07.2018 வியாழக்கிழமை மாலை டென்மார்க்கில் காலமானார். என்ற தகவலை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.
கடந்த சில மாதங்களாக அவர் கடும் சுகயீனமடைந்திருந்தார். இறுதிவரை தமிழுக்காகவும், தமிழ் மக்களுக்காகவும் ஒரு நொடி தாமதியாது உழைத்த பெருமகனார் தன் வாழ்வின் கடைசி நொடி வரை போராடினார்.
தள்ளாத வயதிலும் தமிழுக்காகவும், தமிழின விடிவுக்காகவும் பாடுபட்டவர், சைவத்திற்காக பாடுபட்டு அவர் செய்த சேவைகளை யாரால் ஆற்ற முடியும்.
இனி நிரப்ப ஆளில்லாத இடத்தை விட்டு சென்றுள்ளார்..
இறக்கும் போது அவருக்கு வயது 79 அவருடைய 80 வது வயது நிறைவை பேரெடுப்பில் நடத்த திட்டமிட்டிருந்த வேளையில் எம்மையெல்லாம் விட்டு பிரிந்துவிட்டார்.
தமிழ் கவிதை உலகிற்கு அவர் ஆற்றிய தொண்டு சதாரணமானதல்ல சுவிற்சலாந்து நாட்டில் அவருக்கு நிறை தமிழ் என்று பாராட்டு வழங்கியிருந்தார்கள்.
டென்மார்க்கில் அவர் பங்கேற்ற நிறைவான நிகழ்வும் ஒரு புத்தக வெளியீடே அன்றைய தினம் வைத்தியசாலையில் இருந்தே நேரடியாக நூல் வெளியீட்டுக்கு வந்திருந்தார்.
அத்தருணம் கூடியிருந்த டென்மார்க்கின் கலைஞர்கள் அனைவரும் ஒன்றுகூடி அவர் சேவையை பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருதை வழங்கினார்கள்.
அவர் இறப்பதற்கு முன்னர் தனது மரண வாக்குமூலத்தை அலைகள் என்ற டென்மார்க் ஊடகத்திற்கு வழங்கியிருக்கிறார். அவர் விருப்பை நிறைவேற்ற வேண்டியது நம் கடமையாகும்.
அவருடைய முக்கிய விருப்பம் தமிழ் மக்களின் வீடுகளில் மரணம் நிகழும் போது அதை செய்ய ஆட்கள் இல்லாமை பெரும் குறையாக இருக்கிறது.
இதைப் போக்க அவர் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார் அது வரவுள்ள நிலையில் இறைவனடி சேர்ந்துள்ளார்.
சைவசமய மரணக்கிரியை செய்முறை கையேடு என்ற அந்த நூல் தமிழ் மக்களுடைய கைகளில் கிடைக்க வேண்டுமென்ற ஆவலோடு மறைந்துள்ளார்.
இவரைப் போன்ற ஒருவர் டென்மார்க்கில் வாழ்ந்தது எமக்கெல்லாம் பெருமை.. தமிழுக்கு பெருமை.. தமிழர் தாயகத்திற்கு பெருமை.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல வேலணை பெருங்குளம் முத்துமாரி அம்மனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!!ஓம் சாந்தி!!!
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் பற்றிய விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.

துயர் பகிர்தல்