ஐபோனுக்காக உயிரை விட்ட இளம் யுவதி!!

கொழும்பை அண்டிய புறநகர் ஒன்றில் ஐபோன் கிடைக்காமையினால் 17 வயது யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பிலியந்தலை பிரதேசத்தை சேர்ந்த 17 வயதான யுவதி ஒருவர் உடலில் மண்ணெண்ய் ஊற்றி தீயிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உயிரிழந்த மகள் தொடர்பில் கொழும்பு மரண விசாரணை பிரிவிடம் தந்தை வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
‘உயிரிழந்தவர் என முதல் பிள்ளையாகும். அவர் சற்று அடம்பிடிக்கும் குணமுடையவர். பல முறை வீட்டில் சண்டடையிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பின்னர் பொலிஸாரின் உதவியுடனே அவரை கண்டுபிடித்தோம்.
பொலிஸ் அதிகாரிகளே அவருக்கு ஆலோசனை வழங்கி எங்களிடம் அனுப்பி வைத்தார்கள். இறுதியாக மகள் ஐபோன் ஒன்று கேட்டார். அவரது நிலை அறிந்தமையினால் ஐபோன் ஒன்றை கொள்வனவு செய்து கொடுக்க தீர்மானித்தோம். இன்னும் இரண்டு நாட்களில் பெற்றுத் தருவாக கூறிவிட்டு அதற்கு தேவையான பணத்தை தேடி கொண்டிருந்தோம். எனினும், அவர் அதற்கு முன்னர் கோபத்தில் உடலில் மண்ணெண்ய் ஊற்றி கொண்டு தாயின் முன்னால் சென்று தீயிட்டு கொண்டார்.
தான் ஐபோன் கிடைக்காதென நினைத்து தாயை அச்சுறுத்துவதாக இந்த வேலை செய்தாக கூறினார். அவரை காப்பாற்றி களுபோவில வைத்தியசாலைக்கு அழைத்து சென்றோம். அந்த வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அவரை மாற்றி அனுப்பினார்கள். எனினும், மகளை காப்பாற்ற முடியவில்லை எனவும் அவரது தந்தை கூறியுள்ளார்.

Allgemein