சந்நிதிக்கு புதிய பாலத்தினூடாக செல்லலாம். !

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு செல்லத் தற்காலிகமாக அமைக்கப்படும் பாலம் அகற்றப்படவுள்ளது. இனி அதற்கு பதிலாக புதிதாக அமைக்கப்பட்டு வரும் பாலம் பயன்பாட்டுக்கு விடப்படவுள்ளது.
முக்கியமாக வலிகாமம் பகுதியில் இருந்து செல்லும் பக்தர்கள் திருவிழாக் காலங்களில் கூடுதலாக பாவிக்கும் கடலின் ஊடாக தற்காலிகமாக மண் அணைக்கப்பட்டிருக்கும் பாலத்தினூடாக பக்தர்கள் செல்வார்கள் . இந்நிலையில் முன்னர் இங்கு இருந்த பாலம் உக்கி சேதமடைந்த நிலையில் உலக வங்கியின் உதவியுடன் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ளது.
செல்வச் சந்நிதி ஆலய பெருந்திருவிழா ஓகஸ்ட் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. திருவிழாக்காலத்தின் இறுதி மூன்று நாட்களும் இப்பாலத்தின் ஊடாக இருவழிப் பாதையாக திறந்து விடப்படவுள்ளது.

தாயகச்செய்திகள்