சுபாஸ் கலா தம்பதியினரது 26வது திருமணநாள்வாழ்த்து
வாழ்த்துக்கள்

சுபாஸ் கலா தம்பதியினரது 26வது திருமணநாள்வாழ்த்து

யேர்மனியில் வாழ்ந்துவரும் சுபாஸ் கலா தம்பதியினர் இன்று தமது 26வது திருமணநாளை பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர் இன்று 26வது திருமணநாள் காணும் இவர்கள் இன்றுபோல் இன்னும் பல இருபந்தைந்தைக்காண அனைவரும்வாழ்த்தும் இவ்வேளை வாழ்க வாழ்க பல்லாண்டு காலம் வளமுடன்என ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்திநிற்கின்றது

சுமந்திரன் கைவிட்டார்:டக்ளஸ் கை கொடுத்தார்!
தாயகச்செய்திகள்

சுமந்திரன் கைவிட்டார்:டக்ளஸ் கை கொடுத்தார்!

வடமராட்சி பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிப்பதை தடுப்பது தொடர்பில் இலங்கை கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக கொழும்பிற்கு அழைத்த தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் எம்மை சந்திக்காது கூட ஏமாற்றிவிட்டாரென வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் நாகராஜா தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக…

குற்றவாளிகளுடன் பொலிசாருக்கு நெருங்கிய தொடர்பு – முதலமைச்சர் குற்றச்சாட்டு
தாயகச்செய்திகள்

குற்றவாளிகளுடன் பொலிசாருக்கு நெருங்கிய தொடர்பு – முதலமைச்சர் குற்றச்சாட்டு

யாழ்.மாவட்டத்தில் குற்றவாளிகள், போதைவஸ்த்து கடத்தல்காரர்களுடன் பொலிஸார் மிக நெருக்கமான தொடர்புகளை கொண்டிருக்கிறார்கள். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் வரையில் குற்றங்களை குறைக்க இயலாது. மேற்கண்டவாறு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவுக்கு தாம் சுட்டிக்காட்டியிருப்பதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார். யாழ்.மாவட்டத்தின் சட்டம் ஒழு ங்கு நிலமைகள் குறித்து ஆராய்வதற்காக…

போராட வாருங்கள் – வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசம் அழைப்பு
தாயகச்செய்திகள்

போராட வாருங்கள் – வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசம் அழைப்பு

வடமராட்சி பகுதியில் வெளிமாவட்ட மீனவர்கள் கடலட்டை பிடிபதற்கு எதிராக அனைத்து தரப்பினரும் போராட முன் வர வேண்டும் என வடமராட்சி வடக்கு கடற்தொழிலாளர் சமாசத்தின் தலைவர் நாகராஜா தர்மகுலசிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பிலையே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,…

மல்லாகம் சூட்டுச் சம்பவம் – கண்கண்ட சாட்சிகளை சாட்சியம் வழங்க கோரிக்கை
தாயகச்செய்திகள்

மல்லாகம் சூட்டுச் சம்பவம் – கண்கண்ட சாட்சிகளை சாட்சியம் வழங்க கோரிக்கை

மல்லாகம் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவரின் வழக்குத் தொடர்பில் கண் கண்ட சாட்சிகள் எவராவது இருப்பின் தெல்லிப்பளை பொலிசாரிடம் அல்லது மல்லாகம் நீதிமன்றில் சாட்சியம் வழங்க முன்வர வேண்டும் என யாழ்ப்பாணம் மனித உரிமை ஆணைக்குழுவின் இணைப்பாளர் கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் யாழ்ப்பாணம் மனித…

உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்த முயற்சி!
தாயகச்செய்திகள்

உள்ளூர் விவசாயத்தை மேம்படுத்த முயற்சி!

விவசாயம் மற்றும் உள்ளூர் உற்பத்திகளை ஊக்குவிக்கவும் உரிய சந்தைவாய்ப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் முன்வருமாறு நல்லூர் பிதேசசபை உறுப்பினர் தெ.கிரிதரன் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது யாழ் குடாநாட்டில் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அனைத்து உற்பத்திப்பொருட்களும் வெளி மாவட்டங்களில் இருந்து இறக்குமதி செய்கின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலைக்கு யாழ் மாவட்டம்…

சட்டம்,ஒழுங்கு அமைச்சர் யாழில்:கொள்ளைகளோ தாராளம்!
Allgemein

சட்டம்,ஒழுங்கு அமைச்சர் யாழில்:கொள்ளைகளோ தாராளம்!

யாழில் இலங்கையின் சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் காவல்மா அதிபர் தங்கியிருக்கையில் நள்ளிரவில் வீடுபுகுந்தவர்கள் மூன்று பெண்களைக் கட்டி வைத்து கொள்ளையிட்டுள்ளனர். ஒருபுறம் இன்று வடமாகாண முதலமைச்சரினை அவரது அலுவலகத்தில் வைத்து அமைச்சர் சந்தித்து பேசியுமுள்ளார். யாழ்ப்பாணம் உரும்பிராய்ப் பகுதியில் வீட்டினுள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த பெண்களைச் சரமாரியதாகத்…

அரசியல் கைதிகளிற்கு மரணதண்டனை வழங்க நல்லாட்சி முற்படுகின்றது?
தாயகச்செய்திகள்

அரசியல் கைதிகளிற்கு மரணதண்டனை வழங்க நல்லாட்சி முற்படுகின்றது?

அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது தொடர்ந்தும் தடுத்து வைப்பதன் ஊடாக அவர்களை மனநிலை பாதித்தவர்களாக முடக்கிவிடவோ அல்லது மரணதண்டனையினை பெற்றுக்கொடுக்கவோ இந்த அரசு முற்படுகின்றதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வெள்ளிக்கிழமை அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் அவர்…