பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு வடக்கை பதற்றமாக வைத்திருக்க விரும்புகிறனர்

தமிழ் அரசியல்வாதிகள் தங்களுடைய பிள்ளைகளை உயர்கல்வி கற்பதற்கும் பாதுகாப்பாக வசிப்பதற்கும் என வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டு இங்குள்ள மக்களுக்கு எதுவித வசதி வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்காது விடுதலைப் புலிகளை வைத்து அரசியல் செய்து மக்களை தொடர்ச்சியாக பதற்றமான சூழலில் வைத்திருக்கவே விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று (11) விஜயம் மேற்கொண்டிருந்த நாமல் ராஜபக்ச யாழ் ஊடக அமைத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றினை மேற்கொண்டிருந்தர். அதன்போது ஊடகவியலாள ஒருவர் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 500 நாட்களைத் தாண்டி போராட்டம் நடத்துகிற்றார்கள். இதுவரை தற்போதய அரசாங்கத்தினோலோ அல்லது முன்னைய அரசாங்கத்தினாலே எது வித தீர்வும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை. அவர்களது போராட்டம் தொடர்பில் உங்ஙகளது நிலைப்பாடு என்ன என கேள்வியெழுப்பினர் அக் கேள்விகளுக்குப் பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர்,

“முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் இங்குள்ளவர்களைக் கொண்டு ஆராயப்பட்ட எல்.எல்.ஆர்.சி அறிக்கைகள் மூலம் அவர்களுக்கான தீர்வுகள் குறித்து குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போத அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

அவர்கள் நியூயோர்க்கிலும் வாசிங்டனிலும் லண்டனிலும் தயாரிக்கும் அறிக்கைகளை வைத்துக்கொண்டு இங்குள்ள பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் தவிக்கிறார்கள். அங்கிருக்கின்ற தரகர்களுக்கு இங்குள்ள மக்களது பிரச்சனைகள் தெரியாது.

நாங்கள் எந்தத் தரகர்களையும் நம்பப் போவதில்லை. எமது பொதுஜன பெரமுன மூலம் இங்குள்ள இளைஞர்களை இணைத்து அவர்களை பிரதேச சபைகளுக்கும் மாகாண சபைகளுக்கும் அனுப்புவோம்.

இதேபோல இங்குள்ள இளைஞர்கள் பற்றிக் கதைக்கும் தமிழ்த் தலைவர்கள் தங்களுடைய பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டனர். அவர்களுடைய பிள்ளைகள் வெளிநாடுகளில் உயர் கல்வி கற்கிறார்கள். அவர்களுக்கு யாழ்ப்பாணம் எங்கு இருக்கிறது எனத் தெரியாது. ஒரு சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள் என்னுடன் கதைக்கும்போது யாழ்ப்பாணம் பற்றி என்னிடம் விசாரிக்கின்றனர்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் கதைத்து கைதட்டல்களையும் வாக்குகளையும் தமிழ் மக்களிடமிருந்து இலகுவில் பெற்றுவிட முடியும் என்பது தமிழ் அரசியல்வாதிகளுக்கு நன்றாகத் தெரியும். அவர்கள் அதனையே செய்கின்றார்கள். அவர்கள் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் ஒரு பதற்றமான நிலையிலேயே எப்போதும் வைத்திருக்க விரும்புகின்றார்கள். அப்போதுதான் அவர்களினால் திறப்பட தங்கள் அரசியலை முன்னெடுக்க முடியும். தங்கள் அரசியல் அபிலாசைகளைத் தீர்த்துக்கொள்ள முடியும். ” – என்றார்.

Allgemein