மைத்திரி ஒரு சைலன்ட் ஆக்கிரமிப்பாளர் – வடக்கு மக்களுக்கு துரோகமிழைக்கிறார்

 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு ஆக்கிரமிப்பாளர் என கூறியிருக்கும் வடமாகாணசபை உறுப்பினர் அயூப் அஸ்மின் அவருடைய ஆட்க்காலத்திலேயே பெருமளவு காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியிருக்கின்றார்.

வடமாகாணசபையின் 125வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் வன ஜீவராசிகள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் அபகரிப்புக்கள் குறித்து மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் கொண்டுவந்த பிரேரணை மீதான விவாதத் தின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஒரு மௌனமான ஆக்கிரமிப்பாளராக இருந்து கொண்டிருக்கின்றார். 2015ம் ஆண்டுக்கு பின்னான அவருடைய ஆட்சிக்காலத்தில் வடமாகாணத்தில் பெருமளவு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. மன்னார் மாவட்டத்தில் சுமார் ஒரு லட்சம் ஏக்கர் வரையிலான காணிகளை மாவில்ல பேணற் காடுகளாக அறிவித்து ஆக்கிரமித்தார். அதேபோல் முல்லைத்தீவு மாவட்டத்தில் மிக பெருமளவு காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு வடமாகாணத்தின் பல இடங்களில் ஜனாதிபதியின் ஆட்சிக்கா லத்தில் ஆக்கிரமிப்புக்கள் நடந்திருக்கின்றன.

வடகிழக்கு மக்கள் ஜனநாயகத்திற்காகவும், ஊழல் அற்ற ஆட்சிக்காகவும், ஊடக சுதந்திரத்திற்காகவும், கருத்து சுதந்திரத்திற்காகவும் மைத்திரிபால சிறிசேனாவுக்கு ஆதரவளித்து அவரை ஜனாதிபதி ஆக்கினார்கள். ஆனால் இன்று அவர் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் ஒருவராகவும், ஊழல்வாதிகளுக்கு தஞ்சம் கொடுக்கும் ஒருவராகவும் மாறியிருக்கும் நிலையில் ஜனாதிபதியிடம் நீதியை எதிர்பார்ப்பது எப்படி? இராணுவம் மக்களுடைய நிலங்களை விடுவிப்பதாக கொழும்பில் கூறப்படுகிறது. ஆனால் விடுவிக்கப்படும் நிலங்கள் மக்களுடைய தனிப்பட்ட நிலங்களே தவிர மக்களுக்கு கொடுக்கப்படவேண்டிய அரச நிலங்கள் அல்ல. இராணுவம் இன்றளவும் அரச நிலங்களில் இருந்து கொண்டிருக்கிறது.

மேலதிகமாக அரச நிலங்களை தேடிக் கொண்டிருக்கின்றது. அண்மையில் தொல்லியல் திணைக்களத்தை சேர்ந்த சிலரை சந்தித்தபோது அவர்கள் கூறுகிறார் இராணுவம் யாழ்ப்பாண கோட் டையை தமக்கு தரும்படி கேட்பதாக, இப்படிப்பட்ட ஒரு ஜனாதிபதியிடம் காணிகளை இழந்த மக்கள் நீதி கேட்பதால் பயன் ஒன்றும் இருக்கப்போவதில்லை. எனவே இந்த காணி ஆக்கிர மிப்புக்களை சர்வதேசத்திற்கு வழிப்படுத்தவேண்டும் என்றார்.

Allgemein