ஒட்டுசுட்டான் சம்பவம் புலிகளின் மீள் வருகையா?

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப்புலிகளின் புலிக்கொடி மற்றும் 20 கிலோ கிளைமோர் குண்டு என்பவற்றுடன், முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் கடந்த 22 ஆம் திகதி காலை கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று வரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேலும் கைதுகள் தொடரும் எனவும் காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்று கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த 24 வயதுடைய கேதீஸ்வரன் எனும் இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை வந்தநிலையில் நோயாளர் விடுதியிலிருந்து வெளியேறிய போது வைத்தியசாலை வளாகத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடன் இதுவரை ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட கேதீஸ்வரன் என்பவர் விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுப்பட்டவர் எனவும், நெடுங்கேணி காட்டுப் பகுதிக்குள் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பன் தேவிகனுடன் தொடர்புபட்டு ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் எனவும் காவற்துறைத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், மேலும் கைதுகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் காவற்துறைத் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து இருபது கிலோ கிளைமோர் குண்டு, கைக்குண்டு ஒன்று, றிமோட் கொன்ரோல் நான்கு, ரி56 துப்பாகி தோட்டாக்கள்- 98, விடுதலைப்புலிகளின் சீருடை – 2, சுமார் 45 வரையான விடுதலைப்புலிகளின் புலிக்கொடி என்பவை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

தாயகச்செய்திகள்