காங்கேசன் துறை கடற்பரப்பில் பற்றி எரியும் கப்பல் யாருடையது தெரியுமா….? வெளியானது இரகசியம்…!!

யாழ். மயிலிட்டித் துறைமுகத்துக்கு அண்மையில் நங்கூரம் இடப்பட்டிருந்த கப்பல் ஒன்று தீப்பற்றிக்கொண்டிருக்கும் நிலையில், குறித்த கப்பல் தமிழ் பேசும் பெண் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளது.ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  என்ற பெயர் கொண்ட இந்தக் கப்பல் பழுதடைந்த நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மயிலிட்டி இறங்குதுறைக்கு அப்பால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், குறித்த கப்பல் இன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. இது நாசவேலையாக இருக்கலாம் என்று சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.தீயைக் கட்டுக்குள்கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் வெற்றியளிக்காத நிலையில், குறித்த கப்பல் வெடித்துச் சிதறும் ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையிலேயே, இந்த கப்பல் தமிழ் பேசும் பெண் இராஜாங்க அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என தகவல் வெளியாகியுள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein