கூட்டமைப்பு புதுவேடம்: நல்லாட்சியுடன் முறிவாம்?

அரசியலில் பின்னடைவுகளையும் தோல்விகளையும் மக்களின் வெறுப்பையும் சந்தித்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரச எதிர்ப்பு எனும் புதிய கடையை திறக்கமுடிவு செய்துள்ளது.கடந்த உள்ளுராட்சி தேர்தலில் ஏற்பட்ட பாரிய பின்னடைவு மற்றும் எதிர்வரும் தேர்தல்களில் மக்களின் ஆதரவு தங்களுக்கு மேலும் குறைவடையப்போவதை கூட்டமைப்பு தலைமை உணர்ந்துள்ளது. இந்நிலையில் வேறுவழியின்றி வாக்குகளை மட்டும் இலக்கு வைத்து எதிர்வருங்காலங்களில் தாங்கள் இலங்கை அரசாங்கத்தை ஆதரிக்காமல் “எதிர்ப்பு அரசியல்” செய்யப்போவதாக அறிவிக்கவுள்ளதாக சுமந்திரன் செய்திகளை கசியவிட்டுள்ளார்.
தற்போது முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூட்டமைப்பிற்கு சவாலாக தனியே கட்சி ஆரம்பிக்க அல்லது எதிர் தரப்புக்களை ஒன்றிணைக்க முயற்சிக்கின்றார்.இளம் தலைமுறையினரை இலக்கு வைத்து அரசியல் நகர்வுகளை முதலமைச்சர் ஆரம்பித்துள்ள நிலையில் போட்டிக்கு அங்கும் தமிழரசு கடைவிரிக்க திட்டமிட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உற்று நோக்கினால் இளைஞர்கள் ஆதரவு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் பக்கம் இருப்பது உறுதியாகியிருப்பதாக அவதானிகள் கருதுகின்றனர்.
இதனால் மாகாணசபை தேர்தல் மேலும் முகத்திலறையும் செய்தியை தருமென கூட்டமைப்பு கருதுகின்றது.மக்கள் ஆதரவுபுலமற்ற மாவை தனக்கே முதலமைச்சர் கதிரையென இப்போதே விடப்பிடியாக நிற்கின்றார்.
இதனிடையே நல்லாட்சியென சொல்லிக்கொள்ளும் அரசிற்கு முண்டுகொடுத்தமை,சர்வதேசத்தில் அதற்கு பாதுகாப்பு கொடுத்தமை மற்றும் ஜநாவில் முண்டுகொடுத்தமை தொடர்பில் உறவை முறிப்பதற்கு முன்னராக கூட்டமைப்பு தமிழ் மக்களிற்கு பொறுப்புக்கூறவேண்டுமென குரல்கள் ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளன.
Allgemein