இலங்கையில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ள சிங்கள இனம்!

சிங்கள இனம் பிரதான பெரும்பான்மையான இனம் என்று எண்ணுவதே மிகப் பெரிய பிரச்சினை என நவசமசமஜாக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவி இருப்பதால், சிங்களம் என்ற தேசிய வாதம் உறுதிப்படுத்தப்பட்டு வருவதால், அந்த பதவியை ஒழிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதனால், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒழிப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ள யோசனையை எதிர்ப்பதற்கு எவ்வித காரணங்களும் இல்லை.
நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள 20வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் தொடர்பான யோசனை கட்டாயம் வெற்றி பெறும் எனவும் விக்ரமபாகு கருணாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Allgemein