அர­சி­யல் கண்­கட்டு விளை­யாட்­டுக் காட்­டிய ரணில்

தொடர்ச்­சி­யா­கப் பல ஆண்­டு­கள் எதிர்க்­கட்­சி­யா­கச் செயற்­பட்ட ஐ.தே.கட்சி, 2002ஆம் ஆண்­டில் ரணி­லின் தலை­மை­யில் ஆட்சி அமைக்­கும் வாய்ப்­பைப் பெற்­றது. அந்­தச் சம­யத்­தில் நாட்­டின் அரச தலை­வி­யா­கச் சந்­தி­ரிகா செயற்­பட்டு வந்­தார்.
தமது சிறு­வ­ய­தி­லி­ருந்தே தமது அர­சி­யல் வளர்ச்­சிக்கு சந்­தி­ரி­கா­வால் இடை­யூ­று­கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தால் சந்­தி­ரிகா அக்­கா­வின் சுபா­வம் குறித்து ரணில் மற்­ற­வர்­க­ளை­விட அதி­கம் தெரிந்து வைத்­தி­ருந்­தார். 2002ஆம் ஆண்­டில் தாம் அரசை நிறுவி அதிக காலம் செல்­லும் முன்­னரே, தமக்கு மூளைச் சலவை செய்ய சந்­தி­ரிகா திட்­ட­மி­டு­கி­றார் என்­பதை ரணில் உணர்ந்து கொண்­டார்.
ஆகவே 2015ஆம் ஆண்­டில் நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்து நிறை­வேற்­றிய அர­ச­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தத்தை, 2002ஆம் ஆண்­டி­லேயே நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்து நிறை­வேற்­றி­விட ரணில் திட்­ட­மிட்­டுச் செயற்­பட்­டார்.
ஆயி­னும் துர­திஸ்­ட­வ­ச­மாக அந்­தப் 19ஆவது திருத்­தத்தை அந்த வேளை­யில் நாடா­ளு­மன்­றில் நிறை­வேற்­றிக்­கொள்ள ரணி­லால் இய­லாது போய்­விட்­டது. 2002ஆம் ஆண்­டி­லேயே அந்­தப் 19ஆவது திருத்­தம் நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டி­ ருந்­தால் பிர­பா­க­ர­னும் அவ­ரது சகாக்­க­ளும் தற்­போது உயிர்­வாழ முடிந்­தி­ருக்­கும். சந்­தி­ரிகா தரப்­பி­ன­ரும், மகிந்த தரப்­பி­ன­ரும் அர­சி­யல் அரங்­கி­லி­ருந்து காணா­மல் போயி­ருந்­தி­ருப்­பர்.
அர­சி­யல் எதிர்வு கூறல்­கள் எப்­போ­தும் நிஜ­மா­வ­தில்லை
அது எவ்­வாறு சாத்­தி­ய­மா­கி­யி­ருக்­கும் என்ற சந்­தே­கம் இவ்­வே­ளை­யில் தலை­தூக்­கு­வது நியா­ய­மா­னதே?
அது இவ்­வாறுதான் அமைய நேர்ந்­தி­ருக்­கும் . 2002ஆம் ஆண்­டில் அர­ச­மைத்து நீண்ட காலம் கழி­வ­தற்கு முன்­னர் சந்­தி­ரி­கா­வின் திட்­டம் குறித்து ரணில் தௌிவா­கப் புரிந்து கொண்­டார். ஐந்து ஆண்­டு­கள் பூர்த்­தி­யா­வ­தற்கு முன்­னர் நாடா­ளு­மன்­றத்­தைக் கலைக்­கும் அர­ச­த­லை­வ­ருக்­கு­ரிய அதி­கா­ரத்தை இல்­லா­மல் செய்­யும் தமது திட்­டத்தை முன்­னி­றுத்­தியே ரணில் அர­ச­மைப்­புக்­கான அந்­தப் 19ஆவது திருத்­தத்தை 2002ஆம் ஆண்­டில் நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார்.
இந்த இடத்­தில் வேறொரு கேள்­வி­யும் எழு­கி­றது. அர­சைக் கலைக்­கா­து­விட்­டால் பிர­பா­க­ர­னுக்கு எதி­ரான போரி­லி­ருந்து பிர­பா­க­ரனை எவ்­வாறு காப்­பாற்ற முடிந்­தி­ருக்­கும்?
அது இவ்­வா­று­தான் இடம்­பெற நேர்ந்­தி­ருக்­கும். 2002ஆம் ஆண்­டில் அதி­கா­ரத்­தைக் கைப்­பற்­றிக் கொண்­ட­தை­ய­டுத்து ரணில் போரை உட­ன­டி­யாக நிறுத்தி நோர்­வே­யின் சம­ாதா­னத் தூ­து­வர் எ­ரிக் சொல்­ஹெ­யிமை இலங்­கைக்கு வர­வ­ழைத்து சமா­தா­னப் பேச்­சுக்­களை ஆரம்­பித்­தார்.
எதிர்­ம­றை­யாக ஆகிப்­போன ரணி­லின் திட்­டம்
போர் நிறுத்­தம் நடை­மு­றை­யில் இருந்த இரண்டு ஆண்­டு­கள் காலத்­தில், நாட்­டில் நில­விய நில­வ­ரம் குறித்து விசே­ட­மாக விப­ரிக்க வேண்­டி­ய­தில்லை. விடு­த­லைப்­புலி போரா­ளி­கள் வாய்ப்­பைப் பயன்­ப­டுத்­திக் கொழும்­புக்­குள் இலே­சாக ஊடு­ரு­வி­னர். கொழும்­பில் இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­னர்­க ­ளுக்­குக்­கூ­டப் பாது­காப்பு இருக்­க­வில்லை. விடு­த­லைப்­பு­லி­க­ளது அச்­சு­றுத்­தலை இரா­ணு­வப் புல­னாய்­வுப் பிரி­வி­னர் எதிர்­நோக்­க­வேண்­டி­யி­ருந்­தது. தெற்­கில் விடு­த­லைப்­பு­லி­க­ளது தாக்­கு­தல்­கள் வெற்­றி­க­ர­மாக முன்­னெ­ டுக்­கப்­பட்­டன. இரா­ணு­வத்­தி­னர் தமது ஆயு­தங்­க­ளைக் களைந்­த­போ­தி­லும், விடு­த­லைப்­பு­லி­கள் தமது ஆயு­தங்­க­ளைக் கீழே­வைக்­க­வில்லை. அவர்­க­ளது தாக்­கு­தல் நட­வ­டிக்­கை­கள் மேலும் தொடர்ந்­தன என்­பது கசப்­பான உண்­மையே.
நிலைமை ஒரு­பு­றம் இவ்­வாறு தீவி­ர­ம­டைந்து சென்ற வேளை­யில், அர­சைக் காப்­பாற்­றிக் கொள்­ளும் நோக்­கில் ரணிலோ அர­ச­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தத்தை நாடா­ளு­மன்­றில் முன்­வைத்­தார். அது அந்த வேளை­யில் நாடா­ளு­மன்­றில் நிறை­வேற்­றப்­பட்­டி­ருப்­பின், எதிர்க் கட்­சி­யி­னர் அரசை எந்த அள­வுக்கு விமர்­சித்த போதி­லும், விடு­த­லைப்­பு­லி­கள் நாடு­த­ழு­விய ரீதி­யில் குண்­டுத்­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டா­லும், நாட்டு மக்­கள் அர­சுக்கு எதி­ராக வீதி­யில் இறங்­கிப் போரா­டி­னா­லும், சுருக்­க­மா­கக் கூறு­வ­தா­னால், முழு­நாட்டு மக்­க­ளுக்­குமே அரசு வேப்­பங்­கா­யா­கக் கசந்­தா­லும், ரணி­லின் தலை­மை­யி­லான அரசு ஐந்து ஆண்­டு­க­ளுக்­குப் பத­வி­யி­லி­ருக்க முடிந்­தி­ ருக்­கும்.
அவ்­வி­தம் இடம்­பெற்­றி­ருப்­பின், 2005ஆம் ஆண்­டில் நாட்­டின் தலை­வ­ரா­கும் வாய்ப்பு மகிந்­த­வுக்­குக் கிட்­டி­யி­ருந்­தி­ருக்­காது. அவ்­வி­தம் மகிந்த பத­விக்கு வரா­தி­ருப்­பி­னும், பிர­பா­க­ரன் உயி­ரி­ழந்­தி­ருக்க நேர்ந்­தி­ருக்­காது. பிர­பா­க­ரன் உயி­ரி­ழக்க நேர்ந்­தி­ருக்­கா­விட்­டால் போர் முடி­வுக்­கு­வர வாய்ப்­பி­ருந்­தி­ருக்­காது.
போர் முடி­வுக்கு வரா­தி­ருந்­தால், நாடு தப்­பிப்­பி­ழைத்­தி­ருக்க முடி­யாது. அவ்­வா­றா­னால், மகனே எமக்கு நாடென்று ஒன்­றில்லை (அபட புத்தே, ரட்­டக் நத்தே) என்று கூற­வேண்­டிய நிலை சிங்­கள மக்­க­ளுக்கு ஏற்­பட்­டி­ருக்­கும். அந்த வகை­யில் அநு­ர­கு­மார திச­நா­யக சொல்­வது போன்று, 2002ஆம் ஆண்­டில் சந்­தி­ரி­கா­வின் கண்­க­ளைத் துணி­யால் கட்­டி­விட்டு நாட­க­மாட ரணில் தீட்­டிய திட்­டம் தோல்­வி­யில் முடிந்­த­தா­லேயே அர­சி­யல் அபி­லாசை கார­ண­மா­க­வா­யி­னும்­கூட, மகிந்­த­வால் போரை முற்­று­மு­ழு­தாக முடி­வுக்­குக் கொண்­டு­வர முடிந்­தது.
மைத்­தி­ரி­பால மீதும் தனது கண்­காட்டு வித்­தை­யைப் பிர­யோ­கித்த ரணில்
நீண்ட கால­மாக எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்­து­வந்த ரணி­லால், ஒரு­வாறு 2015ஆம் ஆண்­டில் மீண்­டும் அர­ச­மைத்து தலைமை அமைச்­ச­ராக முடிந்­தது. மைத்­தி­ரி­பால சிறி­சேன அரச தலை­வ­ரா­கப் பத­வி­யேற்­றார். அரச தலை­வர் ஒரு கட்­சிக்­கா­ர­ரா­க­வும், தலைமை அமைச்­சர் மற்­றொரு கட்­சிக்­கா­ர­ரா­க­வும், இருந்து கொண்டு நீண்ட காலத்­துக்கு அர­சைச் சுமு­க­மாக நடத்­திச் செல்­வது சிர­ம­மா­ன­தொன்று என்­பதை, 2015ஆம் ஆண்­டில் ரணிலை ஆட்சி அதி­கா­ரத்­துக்­குக் கொண்­டு­வர முன்­னின்று செயற்­பட்ட சந்­தி­ரிகா அக்கா, 2002ஆம் ஆண்­டி­லேயே ரணி­லுக்கு எடுத்­துக்­கூ­றி­யி­ருந்­தார்.
கொள்­ளிக்­கட்டை சூட்­டால் காயப்­பட்ட மனி­தன், தங்க ஆப­ரண வௌிச்­சத்­துக்­குக் கூட அஞ்­சு­வான் என்­பது முது­மொழி. அந்­த­வ­கை­யில் ரணில் குறித்து முன்­னெச்­ச­ரிக்­கை­யு­ட­னேயே சந்­தி­ரிகா செயற்­பட்­டார். சந்­தி­ரிகா சிக்­குப்­ப­டாது தப்­பித்­துக்­கொண்ட ரணி­லின் கண்­கட்டு வித்­தை­யில் மைத்­திரி வச­மா­கச் சிக்­கிக் கொண்­டார். சந்­தி­ரிகா ஒரு பக்­கத்­தில் ஒதுங்­கி­யி­ருந்து நடப்­ப­வற்­றைப் பார்த்து சிரித்­துக் கொண்­டி­ருந்­தார். மைத்­தி­ரி­பா­ல­வின் கண்­க­ளைக்­கட்டி மறைத்­து­விட்டு, ரணில் தனது திரு­வி­ளை­யா­டலை முன்­னெ­டுத்­துச் சென்­றார்.
மிக இல­கு­வாக, சிர­மங்­கள் எது­வு­மின்றி, அர­ச­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தத்தை ரணில் வெற்­றி­க­ர­மாக நிறை­வேற்­றிக் கொண்­டார். இப்­போது இன்­றைய அர­சு­மீது அதி­ருப்­தி­யுற்று நாட்­டின் பொது­மக்­கள் வீதி­யில் இறங்­கிப் போரா­டி­னா­லும் சரி, ஐ.தே.கட்சி தேர்­த­லுக்கு மேல் தேர்­த­லில் தோல்­விக்கு முகம் கொடுக்க நேர்ந்­தா­லும் சரி, முழு­நாட்டு மக்­க­ளுக்­கும் இந்த அரசு வேப்­பங்­கா­யா­கக் கசந்­தா­லும் சரி, அரசு கலைக்­கப்­படுவதற்­கான வாய்ப்பு முற்­று­மு­ழுதா­கக் கிடை­யாது என்­பது உறு­தி­யா­கி­யுள்­ளது. ஐந்து ஆண்­டு­கள் காலத்தை நிறைவு செய்­வ­தற்கு முன்­னர், ரணி­லின் தலை­மை­யி­லான அர­சைக் கலைத்­து­விட மைத்­தி­ரிபா­ல­வால் ஒரு­போ­துமே இய­லப்­போ­வ­தில்லை என்­பதே யதார்த்­த­மா­கும்.
மைத்­தி­ரி­பா­ல­வுக்­கும் ரணி­லுக்­கு­மி­டையே கடும் கருத்து முரண்­பா­டென நம்­பும் நாட்டு மக்­கள்
தற்­போது மைத்­தி­ரி­பா­லா­வுக்கு, ரணில்­மீது கடும் கசப்­பும், வெறுப்­பும் ஏற்­பட்டு விட்­டுள்­ள­தாக நாட்டு மக்­கள் பர­வ­லாக நம்­பு­வ­தா­கக் கூறப்­ப­டு­கி­றது. இது எவ்­வ­ளவு தூரம் உண்மை என்­ப­தைக் கூற­மு­டி­யா­துள்­ளது. ஆனால் கடந்த சில நாள்­க­ளாக வௌிவ­ரும் செய்­தி­களை அவ­தா­னிக்­கும் போது இதில் உண்மை கிடை­யாது என்று உறு­தி­யா­கக் கூறு­வும் இய­லா­துள்­ளது.
அர­ச­மைப்­புக்­கான 19ஆவது திருத்­தத்தை நாடா­ளு­மன்­றில் நிறை­வேற்­றிய கையோடு ரணில்–­ம­லிக் சம­ர­விக்­கி­ரம தரப்­பி­னர் பொரு­ளா­தா­ரக் குழு­வொன்றை உரு­வாக்­கி­யி­ருந்­த­னர். இதன் மூலம் மீண்­டும் ஒரு­த­டவை மைத்­தி­ரி­பா­லா­வின் கண்­கள் இரண்­டும் துணி­யால் இறுக்­கிக் கட்­டப்­பட்­டன. பொரு­ளா­தா­ரக்­குழு என்ற பெய­ரில் மலிக் சம­ர­விக்­கி­ரம தரப்­பி­னர் சாக்­கின் வாயை இறு­கக் கட்­டிக் கொண்­ட­னர். கயிற்­றில் கட்­டப்­பட்­டுள்ள மாடு சுற்­றிச் சூழல்­வது அரு­கி­லுள்ள தென்­னம் பிள்­ளை­யைக் கடித்து உண்­ப­தற்கே என்­பதை மைத்­தி­ரி­பால உண­ரத் தலைப்­பட்ட வேளை, காலம் கடந்து போய்­விட்­டி­ருந்­தது.
இதற்­குப் பொருத்­த­மா­ன­தொரு உதா­ர­ண­மாக சிங்­கப்­பூ­ரு­ட­னான ஒப்­பந்­தத்­தைக் குறிப்­பிட இய­லும். மைத்­தி­ரி­பால கண்­மூ­டிக் கண்­தி­றப்­ப­தற்­குள் ஒப்­பந்­தப் பத்­தி­ரத்­தின் பக்­கங்­கள் புரட்­டப்­பட்­டு­விட்­டன.
குறித்த ஒப்­பந்­தத்­தின் பார­தூ­ரத்­தன்மை மைத்­தி­ரி­பா­ல­வுக்கு இப்­போ­து­தான் புரிந்­துள்­ளது. ஆனால் பெர­ஹர ஊர்­வ­லம் கடந்து போய் விட்­டுள்ள நிலை­யில், மைத்­தி­ரி­யால் என்­ன­தான் செய்ய இய­லும்?
குறித்த ஒப்­பந்­தத்­தால் நாட்­டுக்கு நன்­மை­யே­தும் இல்லை என்­பது மைத்­தி­ரிக்­கும் புரி­யா­மல் இருந்­தி­ருக்­கக்­கூ­டும். எந்­த­வொரு பொரு­ளை­யும் உற்­பத்தி செய்­யாத சிங்­கப்­பூர் நாட்­டு­டன் சுதந்­திர வர்த்­தக ஒப்­பந்­தக் கொள்கை மேற்­கொண்­ட­தன் மூலம், இலங்கை ஈட்­டிக் கொண்ட பயன் எது­வு­மில்லை. அதே­வேளை சிங்­கப்­பூ­ருக்கு ஏற்­று­மதி செய்­யத்­தக்க பொருள்­கள் எது­வும் எம்­மி­டம் கிடை­யாது என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­க­தொன்று. பொருள்­கள் மீள் ஏற்­று­ம­தி­யின்போது, சிங்­கப்­பூர் எமக்கு வாய்ப்பு ஏற்­ப­டத்­தக்க விதத்­தில் செயற்­ப­டப்­போ­வ­து­மில்லை.
மத்­தி­ய­வங்கி பிணை­முறி ஊழல்­மூ­லம் சக­ல­ருக்­கும் தண்ணி காட்­டிய அர்­ஜூன் மகேந்­தி­ரன்
மத்­திய வங்கி பிணை­முறி ஊழல் குறித்து திட்­டம் தீட்­டிய முன்­னாள் மத்­திய வங்­கி­யின் ஆளு­நர் மகேந்­தி­ரன், ஊழல் மோசடி பகி­ரங்­க­மா­ன­தை­ய­டுத்து நாட்டை விட்­டுத் தப்­பிச் சென்­றார். பன்­னாட்­டுப் பொலிஸ் தரப்­பி­ன­ரால் தேடப்­பட்ட வேளை­யில் மகேந்­தி­ரன் சிங்­கப்­பூ­ரில் ஔிந்து கொண்­டார். மலிக் சம­ர­விக்­கி­ரம தரப்­பி­ன­ரது சிங்­கப்­பூர் ஒப்­பந்­தம் மகேந்­தி­ர­னால் திட்­ட­மி­டப்­பட்­ட­தொன்று.
மகேந்­தி­ரன் சிங்­கப்­பூ­ரில் ஔிந்­தி­ருந்து கொண்டு குறித்த சிங்­கப்­பூர் ஒப்­பந்­தம் குறித்­துத் திட்­டம் தீட்­டி­யி­ருந்­தார். ரணில் தரப்­பி­ன­ருக்­கும் மலிக் சம­ர­விக்­கி­ரம தரப்­பி­ன­ருக்­கும் வெட்­கம் என்­பது கொஞ்­சம் கூடக் கிடை­யாது என்றே கூற­வேண்­டி­யுள்­ளது. கழுத்­தில் பிடித்து இலங்­கைக்கு இழுத்து வந்து, சிறைக்­கூண்­டில் அடைக்­கப்­பட வேண்­டிய திருட்­டுப் பேர்­வ­ழி­யான மகேந்­தி­ரன், இன்று ரணில்–­ ம­லிக் சம­ர­விக்­கி­ரம தரப்­பி­ன­ருக்கு திட்­டம் வகுத்து உத­வும் ஆலோ­ச­க­ராக ஆகி­யுள்­ளார்.
மலிக் தரப்­பி­ன­ரது பொரு­ளா­தா­ரக் குழு முற்­று­ மு­ழுக்க ஏமாற்று வேலை என்­பது மைத்­தி­ரி­பா­ல­வுக்­குத் தெரிய வந்­த­போது காலம் கடந்து போய்­விட்­டி­ருந்­தது. அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தின்போது, ரணில்–­ம­லிக் சம­ர­விக்­கி­ரம தரப்­பி­னர்­களை பொரு­ளா­தா­ரக் குழு குறித்து விமர்­சித்து ஏசி­விட்டு, கடும் கோபத்­து­டன் மைத்­தி­ரி­பால கூட்­டத்தை விட்டு வௌியே­றிச் சென்­ற­போது, தமது தரப்­புத் தவ­றைப் பூசி மெழுகி எப்­ப­டி­யா­வது மைத்­தி­ரி­பா­ல­வைச் சமா­தா­னப்­ப­டுத்­து­வ­தற்­காக ரணில்–­ம­லிக் சம­ர­விக்­கி­ரம தரப்­பி­னர்­கள் மைத்­தி­ரி­பா­ல­வைப் பின் தொடர்ந்து சென்­ற­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால், அதை­யும் கூட மறைத்து, ஒரு­வாறு இட்­டுக்­கட்­டிச் சமா­ளிக்­கும் விதத்­தில், ராஜித சேன­ரத்ன ரணில்–­ம­லிக் சம­ர­விக்­கி­ரம ஆகி­யோர் மைத்­தி­ரி­பா­ல­வின் பின்­னால் சென்­றமை கழி­வ­றைக்­குச் செல்­லும் நோக்­கி­லா­கு­மெ­னக் கூறிச் சமா­ளிக்க முயன்­றார்.
2002ஆம் ஆண்­டில் ரணி­லின் பொறி­யில் இருந்து நாடு அதிஷ்­ட­வ­ச­மா­கத் தப்­பிப் பிழைத்­தது. ஆனால் 2015ஆம் ஆண்­டில் அவ்­வாறு இடம்­பெ­ற­வில்லை. ரணில் வைத்த பொறி­யில் நாடு மாட்­டிக் கொண்­டு­விட்­டது. அது துர­திஷ்­ட­மா­ன­தொன்றே. ரணி­லின் பாஷை­யில் கூறு­வ­தா­யின், இன்று நாட்டு மக்­கள் தமது வயிற்றை இறு­கக்­கட்­டிக் கொள்ள வேண்டி நேர்ந்­துள்­ளது. எதிர்­வ­ரும் ஒன்­றரை ஆண்­டு­க­ளுக்கு நாட்டு மக்­கள் அத்­த­கைய விதத்­தி­லேயே வாழ்க்­கையை ஓட்­டி­யாக வேண்­டி­யுள்­ளது. எதிர்­வ­ரும் இந்த ஒன்­றரை வரு­டங்­க­ளா­வது மைத்­தி­ரி­பால கண்­க­ளைத் திறந்து கொண்டு அவ­தா­னத்­து­டன் செயற்­பட்­டால், நாட்டு மக்­க­ளுக்கு நன்மை விளை­யாது விட்­டா­லும், மைத்­தி­ரி­பா­ல­வி­னது நல­னா­வது சிறப்­பாய் அமை­யும்.

Allgemein