உலகமே வியக்கும் இலங்கை?

இலங்கையின் புதிய வரைப்படம் நாளைய தினம் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.நில அளவை திணைக்களத்தினால் புதிதாக தயாரிக்கப்பட்ட 1-50000 வகை கொண்ட வரைபடமே வெளியிடவுள்ளதாக நில அளவையாளர் உதயகாந்த தெரிவித்துள்ளார்.கொழும்பு துறைமுக நகரம் மற்றும் கடந்த காலங்களில் நாட்டில் புதிதாக நிர்மாணிக்கப்படுகின்ற பாரிய அபிவிருத்தி திட்டங்களுக்காக அனைத்து தகவல்களும் இந்த வரைபடத்தில் உள்ளடக்கப்படவுள்ளது.இலங்கை வரைபடத்தில் 92 பகுதிகள் உள்ள நிலையில் கொழும்பு நகரம் மற்றும் சுற்றியுள்ள பகுதியில் 66 பகுதிகள் உள்ளதாக உதயகாந்த தெரிவித்துள்ளார்.

முழுமையான நாட்டை கொண்டுள்ள வகையில் செயற்கைக்கோள் தொழில்நுட்பம், விமான புகைப்படங்கள் உட்பட நவீன தொழில்நுட்பத்திலான அளவீட்டு உபகரணங்கள் பயன்படுத்தி பெற்றுக் கொண்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு புதிய வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய வரைபடத்தை வெளியிடுவதனை தொடர்ந்து நாட்டின் அபிவிருத்தி பயணம் இன்னமும் வேகமடைந்து, இலங்கை தொடர்பில் புதிய கண்களில் பார்ப்பதற்கு உலகின் அனைத்து நாடுகளுக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Allgemein