அதிவேக ரயில் திட்டம் கை விடப்படுமா?

கோலாலம்பூர் – சிங்கப்பூர் இடையிலான அதிவேக ரயில் திட்டத்தை கைவிட வேண்டிய தேவை ஏற்பட்டால், அதற்காக சிங்கப்பூருக்குச் செலுத்த வேண்டிய இழப்பீட்டை எந்த அளவுக்கு குறைக்க முடியும் என்பது குறித்து ஆராயப்படவுள்ளது.

இழப்பீடு குறித்து மலேசிய அரசாங்கம் கண்டறியவிருக்கிறது என பிரதமர் துன் மகாதீர் கூறினார்.

இந்தத் திட்டத்தை மலேசிய கைவிட்டால் மலேசியாவுக்கு செலவு மிகக் கூடுதலாக அமையும் என்று கூறப்படுகிறது.

முன்னாள் பிரதமர் டத்தோரீ நஜிப்பினால் 2016ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இவ் உடன்பாட்டின் கீழ், கோலாம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையே 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிவேக ரயில் அமைக்கப்படுகிறது.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், அதிவேக ரயில் திட்டம் உள்பட பல மெகா திட்டங்கள் குறித்து பரிசீலிப்போம் என துன் மகாதீர் தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நாட்டின் கடன் அபரிமிதமாக இருப்பதால் அதனை குறைப்பதற்கான வழிகள் ஆராயப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர் – சிங்கப்பூர் அதிவேக ரயில் திட்டம் 5,500 கோடி ரிங்கிட்டில் உருவாக்க உடன்பாடு என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
உலகச்செய்திகள்