வெளிநாடுகளில் புலிகள் ஒன்று சேருகின்றனர்: அலறும் மைத்திரி

புலிகள் அடையாளத்தை அழிக்க முடியவில்லை. அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர் என இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கூறியுள்ளார்.
இலங்கையின் இறுதிக் கட்ட போர் நிறைவுற்று 9 வது ஆண்டு நினைவு தினம் கொழும்பில் நடந்தது.
அதில் கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா கூறியதாவது;
நாம் விடுதலைப்புலிகள் இயக்கத்தை அழித்து விட்டோம். ஆனால் அவர்களது அடையாளத்தை அழிக்க முடியவில்லை.
அவர்கள் வெளிநாடுகளில் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். இலங்கையில் சுதந்திரம் (தமிழ் ஈழம்) பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.
தனி ஈழம் பெறுவதில் வெளிநாடுகளில் மிகவும் தீவிரமாக உள்ளனர். கொமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த மாதம் லண்டன் சென்று இருந்தேன். அப்போது அங்கு எனக்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள்.
புலிகளின் தலைவர் பிரபாகரன் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி போரில் கொல்லப்பட்டார்.
அதன்பிறகு வன்முறை சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் வெளிநாடுகளில் வாழும் புலிகளின் ஆதரவாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்துகின்றனர் என தெரிவித்தார்.

Allgemein