வடமாகாண கல்வித் திணைக்களம் நடத்திய வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பளுதூக்கலில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா தனது சாதனையை சமப்படுத்தியதுடன் தங்கம் வென்றார்.
குருநகர் சென். ஜேம்ஸ் வித்தியாலய உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் இந்தப் போட்டிகள் நடைபெற்றன.
20 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 63 கிலோ எடைப் பிரிவில் சுண்டுக்குழி மகளிர் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த வி.ஆசிகா 170 கிலோ பளுவைத் தூக்கி தங்கப் பதக்கத்தை வென்றார். அத்துடன் வடமாகாண சிறந்த பளுதூக்கும் வீராங்கனையாகவும் தெரிவு செய்யப்பட்டார்.