மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள அகதி மரணம்: உயிரிழந்தவர் இலங்கையரா?

சிவுஸ்திரேலியாவின் மனுஸ் தடுப்பு முகாமிலுள்ள மற்றுமொரு அகதி நேற்று (22) உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
ஓடுகிற பேருந்திலிருந்து இறங்குவதற்கு முயன்ற றொஹின்யா அகதி ஒருவரே நேற்று (22) காலை 11 மணியளவில் உயிரிழந்துள்ளதாக The Refugee Action Coalition-இன் Ian Rintoul கூறியுள்ளார்.
மியான்மாரிலிருந்து புகலிடம் கோரிய 32 வயதுடைய குறித்த நபர் மனுஸ் தீவில் கடந்த 5 வருடங்களாக தடுப்பில் உள்ளார்.
அத்துடன் உயிரிழந்த குறித்த நபர் நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்ததாகவும் சிகிச்சைக்காக முன்பு அவுஸ்திரேலியா வந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மனுஸ் தீவில் அகதி ஒருவர் மரணமடைந்துள்ளார் என்ற உறுதியான தகவலைத் தவிர வேறு எவ்வித தகவல்களையும் அவுஸ்திரேலியா உள்துறை அமைச்சு வெளியிடவில்லை.
கடந்த ஜுலை 2013 முதல் கடல்கடந்த தடுப்பு முகாமுக்கு அனுப்பப்பட்ட அகதிகளில் இதுவரை 7 பேர் மனுஸ் தீவிலும் மூவர் நவுறு தீவிலும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்