மயானமானது தூத்துக்குடி! இதுவரை அறுவர் உயிரிழப்பு! தொடர்ந்தும் பதற்றம்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி இக்னு நூறாவது நாளில் நடத்தப்பட்ட போராட்டத்தில் பொலிஸாருக்கும் மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் பொலிஸார் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் இதுவரைபெண் ஒருவர் உள்ளிட்ட அறுவர் உயிரிழந்தனர் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட பல்வேறு கிராம மக்கள் ஒன்றிணைந்து பேரணியாகச் சென்றனர்.
பேரணியாக சென்ற பொதுமக்களை பொலிஸார் தடுத்து நிறுத்த முயன்றனர்
ஆனால் தடையை மீறி போராட்டக்காரர்கள் தொடர்ந்து சென்றனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தி கலைக்க முயன்றனர்.
இருப்பினும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்ந்து முன்னேறினர். அப்போது பொலிஸார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினர்.
அதையும் பொருட்படுத்தாத மக்கள் கண்ணீர் புகைக்குண்டு வீசும் வாகனத்தையும், பொலிஸாரையும் ஓட ஓட விரட்டி அனுப்பினர்.
இதனால் நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாத பொலிஸார் திணறினர்.
துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். தூப்பாக்கி சூட்டில் ஒரு பெண் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன

உலகச்செய்திகள்