மட்டக்களப்பில் குளிர்பானங்களில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொள்ளை!!

மட்டக்களப்பு பகுதியில் நீண்டகாலமாக குளிர்பானங்களில் மயக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து கொள்ளையடித்து வந்த காத்தான்குடி மற்றும் கொழும்பைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று புதன்கிழமை (16) குறித்த இருவரும் கைது செய்துள்ளதுடன் தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமைய பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 24 ம் திகதி மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள ஊறணிப் பகுதியில் அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனை செய்துவரும் கடை ஒன்றின் உரிமையாளரிடம் மயக்கமாத்திரை கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார்.

அதன்பின்பு அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலி, கைச் செயின் மோதிரம் உட்பட தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டது.

இது தொடர்பாக பொலிஸ் நிலை சிரேஷ்ட பெறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ் பெரும் குற்றப்பிரிவு பெறுப்பதிகாரி எச். ஏம். டபுள்யூ. ஜி இலங்கரத்தின தலைமையிலான பொலிஸ் சாஜன் கே.சி.எம். முஸ்தப்பா உட்பட பொலிஸ் குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து பொலிஸ் தரப்புக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து காத்தான்குடி தண்ணீர் தாங்கி வீதியைச் சேர்ந்த 57 வயதுடைய ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தப்பட்டது.

இதனையடுத்து கொழும்பு 12 ஆமர் வீதி மஜித்மாவத்தையைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவர் கொழும்பில் வைத்து கைது செய்து கொண்டு வரப்பட்டார்.

கொள்ளையடிக்கப்பட தங்க ஆபரணங்களை காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள நகைக்கடை விற்பனை செய்ததாகவும்,

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கடந்த மாச் 30 திகதி மற்றும் ஏப்பில் 2 ம் திகதி ஆகிய இரண்டு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் கொள்ளையடிக்கப்பட தங்க ஆபரணங்களையும் மீட்கப்பட்டது.

இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரையும் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Allgemein