வவுனியாவில் புலிகளின் ஆயுதங்களைக் கண்டறியத் தேடுதல் நடத்திய படையினர், இறுதியில் உக்கிய பரல் ஒன்றை மீட்டுள்ளனர்.
வவுனியா கூமாங்குளம் காளி கோயில் வீதியில் உள்ள வீட்டில் நீதிமன்ற அனுமதியுடன் இந்தத் தேடுதல் நடத்தப்பட்டது.
நேற்று (13) பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் வீட்டு வளவு முழுவதும் தேடிய நிலையில் எதுவும் சிக்கவில்லை. பின்பு உக்கிய நிலையில் பரல் ஒன்றையே அவர்களால் மீட்க முடிந்தது.
இந்தக் காணியில் 3 ஆண்டுகளுக்கு முன்னரும் இதேபோன்று தேடுதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தேடுதல் நடவடிக்கை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களையும் பாதுகாப்புத் தரப்பினர் அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.