நீதிபதி இளஞ்செழியன் யாழ் மாவட்டத்தில் இருந்து வெளியேறுகிறார்!

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன் திருகோணமலை மாவட்ட நீதிமன்றுக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதியாகக் கடமையாற்றிய அன்னலிங்கம் பிரேம்சங்கர், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் ஏற்கனவே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றியிருந்தார்.
இதேவேளை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
மேல் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற திருமதி சிறிநிதி நந்தசேகரன், கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியாக என்.எம்.எம் அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக கடமையாற்றிய மாணிக்கவாசகர் இளஞ்செழியன், யாழ் குடாநாட்டில் சர்ச்சைக்குரிய வழக்குகளுக்கு துணிச்சலான தீர்ப்புகளை வழங்கி, அமைதியை நிலைநாட்டியிருந்தார் என்பது சிறப்பம்சமாகும்.

தாயகச்செய்திகள்