உடல் எடையை கரைக்க காரமான உணவுகள்!

!

காரமான உணவு யாருக்கு தான் பிடிக்காது. அதிலும் இளம் காளை இளைஞர்களுக்கு காரம் தான் பெரும்பாலும் பிடிக்கும். பாசமான தாய்மார்கள் எப்போதும் காரமாக உணவை சாப்பிட வேண்டாம் என கூறுவது வழக்கம். இது பாசத்தின் பிரதிபலிப்பு.
ஆனால், காரமான உணவு சாப்பிடுவதால், உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. இதய நலனில் இருந்து புற்றுநோய் கட்டி வளராமல் பாதுகாக்கும் வரை பல நன்மைகளை தருகிறது காரமான உணவுகள்.
இனி, காரசாரமான உணவு சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்….

உடல் எடை குறையும்
காரமான உணவினை சாப்பிடுவதால் உடல் எடை குறையுமாம். இதற்கு மிளகாய் தூள் பயன்படுத்தக் கூடாது, பச்சை மிளகாய், மிளகு, மஞ்சள் தான் பயன்படுத்த வேண்டும். காரமான உணவு உடலில் உள்ள கலோரிகளை வேகமாக கரைக்க உதவுகிறது என்பதே இதற்கான காரணம்.
இதய நலன்
காரமான உணவு சாப்பிடுவதால் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை விரைவாக குறைக்க முடியும். உடலில் கொழுப்புச்சத்து குறைவதால் மாரடைப்பு போன்ற இதய கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க முடியும். முக்கியமாக இதய குழாய்களில் கொழுப்பு சேர முடியாது காக்க முடியும்.
புற்றுநோயை தடுக்கும்
சில கார உணவுகளில் புற்றுநோய் கட்டிகளை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. மஞ்சள், மிளகு போன்ற இந்திய மசாலா உணவுகள் இந்த வகையில் சிறந்த பலன் தருகிறது. புரோஸ்டேட் புற்றுக் கட்டி வளராமல் தடுக்க இந்த உணவுகள் சிறந்த முறையில் பலன் தருகிறது.
எச்சரிக்கை
அமிர்தமாக இருந்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சு தான். அளவுக்கு அதிகமாக காரத்தை உணவில் சேர்த்துக் கொள்வது வாய்ப்புண், அல்சர் போன்றவை ஏற்பட காரணமாக இருக்கிறது.

உடல் நலம்