இலங்கை புலனாய்வு பிரிவினருக்கு தகவல்கள் வழங்கிய நபர் மீது ஊர் மக்கள் கடும் தாக்குதல்..!

மலேசியாவில் இருந்து, நியூஸிலாந்து புறப்பட இருந்த அகதிகள் கப்பலை இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு காட்டிக்கொடுத்த நபர் மீது சரமாரியாக தாக்குதலை மக்கள் மேற்கொண்டதோடு சூத்திரதாரியை கைது செய்து கிளிநொச்சி லஞ்ச ஊழல் மோசடியை கட்டுப்படுத்தும் பொலிசாரிடம் ஒப்படைத்ததாக அறிவிக்கப்படுகிறது

கடந்த 2004 க்கு பின்னர் மலேசியாவில் அகதி தஞ்சம் கோரியிருந்த நிலையில் அந்நாட்டு அரசாங்கம் அகதிகள் விடையத்தில் கரிசனை காட்டாமல் 10 ஆண்டுகளுக்கு மேலாக இழுத்தடித்து வந்த நிலையில் கப்பல் ஊடாக அகதி அந்தஸ்து வழங்கும் நாட்டுக்கான பயணத்தை மேற்கொண்ட நிலையில் மலேசியா,இலங்கை ,இந்தோனேசியா ,நியூசிலாந்து நாடுகள் இணைந்து கூட்டு முயச்சியாக கப்பலில் செல்ல இருந்த 131 பேரையும் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்
குறித்த கைது நடவடிக்கைக்கு முழு காரமாக இருந்த வடமராட்சி கிழக்கை சேர்ந்த செல்வராசா உதயசிவம் என்பவரை அடையாளம் கண்ட கிளிநொச்சி உளவன் ஊர் பகுதி மக்கள் நபர் மீது பலத்த தாக்குதலை மேற்கொண்டனர் அப்போது சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் தாக்ககப்பட்டு படுகாயமடைந்த நபரை வைத்தியா சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற பின்னர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது
மக்களால் தாக்கப்பட்டதுக்கான காரணங்கள் சில இணையத்தளங்களில் பதிவாகி இருந்த போதிலும்.உண்மை நிலவரத்தை அறிய எமது செய்தியாளர் குழுவொன்று சம்பவ இடத்துக்கு விரைந்து அப்பகுதி மக்களை வினவியபோது உண்மை இரகசியம் வெளிப்பட்டது.
உதயசிவம் என்பவர் இலங்கை புலனாய்வு பிரிவினரின் நிகழ்சி நிரலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் முகமாக கப்பலை பிடிப்பதற்கு கிளிநொச்சி உளவன் ஊர் பகுதியில் இருந்து சுமார் 29 இளைஞர்களை கப்பலில் வெளி நாட்டுக்கு அனுப்புவதாக பொய் கூறி ஒவ்வொரு இளைஞர்களிடமிருந்து சுமார் பத்து லட்சம் பணம்பெற்று மலேசியா அழைத்து சென்று கப்பலில் ஏற்றி விட்ட பின்னர் இலங்கை திரும்பினார்.

இதற்கிடையில் இன்னுமோர் விடையம் என்னவென்றால் கூட்டி சென்ற 29 இளைஞர்ளையும் நம்ப வைக்கும் முகமாக தனது கூடிப்பிறந்த சகோதரரையும்,தங்கையின் கணவரையும் மலேசியா வரை கொண்டு சென்று திரும்பவம் பல லட்சம் பணத்துடன் யாழ் வந்தடைந்தனர் இவர்கள் வந்தடைந்த பின்னர் ஒரு வாரத்துக்குள் மலேசியா கடற்பரப்பில் வைத்து குறித்த அகதிகள் கப்பல் கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது
எவ்வாறாயினும் நபர் இரண்டு மாதங்களுக்கு மேலாக மலேசியாவில் நின்று இலங்கை புலனாய்வுத்துறையினரோடு கைபேசி ஊடாக தொடர்பை பேணி வந்ததாக இரகசிய தகவலொன்று வெளியாகியிருந்தன
எது,எதுவாக இருந்தாலும் கொண்டு சென்ற 29 பேருடனும் தனது சகோதரர்களை செல்லவிடாது திரும்பி நாட்டுக்கு கொண்டு வந்ததுக்கான காரணம்
யாழ் புலனாய்வு பிரிவு அதிகாரி லக்ஸ்மன் விமல சூரியா இரகசியமாக வெளியுட்டுள்ளார்.
.எமக்கு எப்போது உண்மையான தகவல்களை தாறவர்கள் தமிழர்கள் மட்டுமே.அதன் அடிப்படையில் பல வெற்றிகளை கண்டுள்ளோம்.
உதயசிவம் புத்த பெருமானால் எங்களுக்கு தரப்பட்ட வரப்பிரகாசம் என சொல்வதோடு மட்டுமல்லாமல் எங்களுக்காக தனது சகோரர்களை இங்கிருந்து சிங்கப்பூர் ஊடாக மலேசியா கொண்டு சென்று சரியான துள்ளியமான தகவல்களை எமக்கு தந்துதவியதை இன்றைக்கும் சரி எப்பவும் எம்மால் மறந்துவிட முடியாது எனவும். அங்கிருந்த அத்தனை புலி உறுப்பினர்களையும் கைது செய்த நிகழ்வை நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒன்று என சுட்டிக்காட்டிய அந்த அதிகாரி உதயசிவத்துக்கு புலி பயங்கரவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல்கள் வரலாம்.அவ்வாறு வந்தால் எவ்வித்த்திலும் எதிர் கொண்டு அவருக்கான பாது காப்பு வழங்குவது எங்களது கடமையெனவும் அந்த இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ள நிலையில் இன்று நபர் மீது தாக்குதல் இடம்பெற்றதாக அறிய முடிகிறது
இந்த நிலையில் கைதான நபர்கள் விடுதலையாகி நாடு திரும்பினால் சுறுட்டிய கோடி பணத்துக்கும்,அவர்கள் அனுவவித்த சிறை வாசத்துக்கும் நபர் மீது எவ்வாறான ஒழுக்காற்ரு நடவடிக்கைகளை எடுக்கப்போறார்களோ என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..!

தாயகச்செய்திகள்