ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஊடக சுதந்திர தினம் அனுட்டிப்பு

யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச ஊடக தினம் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் நினைவுகூரப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர்கள் நினைவுத் தூபியில், மாலை 3 மணியளவில் நினைவு வணக்கம் இடம்பெற்றது.
நிகழ்வில், யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உட்பட ஊடகவியலாளர்கள் பலரும் படுகொலை செய்யப்பட்ட சக ஊடக நண்பர்களுக்கு தமது அஞ்சலியைச் செலுத்தினர்.

Allgemein