தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது அவுஸ்திரேலியா- எதிர்ப்புடன் பேரணி

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ்க் குடும்பம் ஒன்று நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று அங்கு அமைதிப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்படுகிறது.

இரண்டு குழந்தைகள் உட்பட குறித்த குடும்பம் நாடுகடத்தலை எதிர்நோக்கியுள்ளது.

இதனை எதிர்த்து அவுஸ்திரேலியா பென்டிகோவில் உள்ள ஹர்கிரேவெஸ் என்ற இடத்தில் இந்த அமைதிப்பேரணி நடத்தப்படுவதாக பென்டிகோ எட்வைசர் ஊடகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த அமைதிப் பேரணி நாடு கடத்தலை எதிர்நோக்கியிருக்கும் இலங்கையின் தமிழ் குடும்பத்துக்கு தமது ஆதரவு வெளிப்படுத்தப்படும் என்று பேரணியின் ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.

போர் காரணமாக, இலங்கை குடும்பத்தினர் புலம்பெயர்ந்து குயின்ஸ்லேன்ட் பிலோலவில் குடியேறிய நிலையில், வீசா முடிவடைந்த நிலையில் அவர்கள் நாடு கடத்தலுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை நாடு கடத்தவேண்டாம் எனக்கோரி 96 ஆயிரத்து 700 உள்ளுர் மக்கள் தமது கையொப்பங்களுடன் கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.
Allgemein