கடலில் இறங்கிய ரஷ்யாவின் அணு ஆலை!


ரஷ்யா உருவாக்கிய அணு ஆலை இன்று கடலில் இறக்கப்பட்டுள்ளது.
ஆர்டிக் பிராந்தியத்தில் உள்ள ரஷ்யாவின் துறைமுக நகரம் மற்றும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அணு சக்தி வழங்கும் நோக்கில் ரஷ்யா மிதக்கும் அணு ஆலை ஒன்றை உருவாக்கியுள்ளது. ஆனால் இந்த மிதக்கும் அணு ஆலைக்கு பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏனெனில் கடந்த 1986 ஆம் ஆண்டு உக்ரைனில் காணப்பட்ட மிதக்கும் அணு ஆலை விபத்துக்கு உள்ளானதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா உருவாக்கிய மிதக்கும் ஆலையை ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பார்க் கப்பல் தளத்தில் இருந்து இன்று கடலில் இறக்கி விடப்பட்டுள்ளது. மேலும் இவ் அணு ஆலை 2019 ஆம் ஆண்டு முதல் செயற்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகச்செய்திகள்