பாடசாலைக்கு செல்ல மறுத்த சிறுமி! மோட்டார்சைக்கிளில் கட்டி சென்ற தந்தை!

சீனாவில் பாடசாலை செல்ல மறுத்த சிறுமியை அவரது தந்தை தனது இருசக்கர வாகனத்தின் பின்னால் கட்டி வைத்து அழைத்து சென்ற காட்சிகள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தையின் இருசக்கர வாகனத்தின் பின்னால் பிணைக்கப்பட்ட சிறுமியின் கால்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடியே சென்றது.
சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை அடுத்து குறித்த நபரை கைது செய்த பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசாரிடம் அந்த நபர், தமது மகளை பாடசாலைக்கு அனுப்புவதே மிகவும் கடினமான பணியாக உள்ளது. தினமும் அவளுடன் மல்லுக்கட்டியே பாடசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டியுள்ளது. சில நாட்களில் அவளை கட்டாயப்படுத்தி இழுத்துச் சென்றால் தான் உரிய நேரத்தில் பாடசாலை செல்ல முடியும். அதுபோன்றே சம்பவத்தன்று அடம் பிடித்த அவளை இருசக்கரவாகனத்தில் கட்டிவைத்து பாடசாலைக்கு அழைத்துச் செல்ல நேர்ந்தது என தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறு இருப்பினும் இது மிகவும் மோசமான செயல் என இணையத்தளங்களில் பலர் விமர்ச்சித்து வருகின்றனர்.

உலகச்செய்திகள்