கதிர்காமம் யாத்திரைக்கு சென்ற பேரூந்து பயங்கர விபத்து…பயணிகளின் நிலை?

தெற்கு அதிவேக வீதியில் இன்று காலை இடம்பெற்ற பேரூந்து விபத்தில் 10 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பத்தேகம மற்றும் பின்னதுவ பகுதிக்கு இடையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
எல்பிட்டியில் இருந்து கதிர்காமம் யாத்திரைக்காக சென்ற சிலரே இந்த விபத்துக்கு முகங்கொடுத்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் இடம்பெறும் போது பேரூந்தினுள் 17 பேர் பயணித்துள்ள நிலையில் அதில் காயமடைந்த 10 பேர் பத்தேகம மருத்துவமனை மற்றும் கராபிடிய போதனா மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

தாயகச்செய்திகள்