இலங்கையில் நல்லாட்சி என்ற பெயரில் மதமாற்றமும் சிங்கள குடியேற்றமும்..!

இலங்கை அரசாங்கம் அனைத்து அரச நிறுவனங்களையும் வெசாக் வாரம் கொண்டாடுமாறு கட்டாயப்பணிப்பு.
கடந்த 26 ம் திகதி தொடக்கம் எதிர்வரும் 02 ம் திகதி வரை வெசாக் வாரமாக கொண்டாடுமாறு பணிக்கப்பட்டு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த திகதிகளில் அனைத்து அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியினை குறித்த வாரத்தில் ஏற்றி வைக்குமாறும் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் மே மாதம் சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்படும் மேதினம் கூட வெசாக் கொண்டாடுவதற்காக மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசாங்கம் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளித்து வருவதனை உறுதிப்படுத்தப்படுகிறது.
இலங்கையில் நல்லாட்சி என்ற பெயரில் மதமாற்றமும் சிங்கள குடியேற்றமுமே இடம்பெற்று வருகிறது. தமிழ் தலமைகள் இதை உணர்ந்து செயற்படவேண்டும்..!

Allgemein