ஃபிரான்சு நாட்டின் அகதிகளின் வாழ்க்கை கடினமாகிறது- புது மசோதா!

பிரெஞ்சுதேசிய சட்டப்பேரவை, 60 மணி நேர விவாதம், 139 வாக்குகள் நூற்றுக்கணக்கான திருத்தங்களுக்கு பின்னர் பிரான்சிற்கு குடிபெயரும் அகதிகளுக்கு கடுமையான குடியேற்ற சட்டங்களை விதித்துள்ளது.

அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ள முக்கிய விஷயங்கள் பின்வருமாறு:
*அகதிகளின் மனுக்களுக்கு வழங்கப்படும் காலக்கெடு குறைப்பு.
*சட்டவிரோதமாக குடியேறுபவர்களுக்கான ஓராண்டு சிறைத்தண்டனை அறிமுகம்.
*சட்டவிரோதமாக குடியேறியவர்களைத் தடுத்து வைக்கக்கூடிய நேரத்தை இரட்டிப்பாக்குதல்.
*விண்ணப்பதாரர்களுக்கு ஒரு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய 90 நாட்களும் மேலும் நிராகரிக்கப்படுவதற்கு எதிராக மேல்முறையீடு செய்ய ,இரண்டு வாரங்கள் காலக்கெடு விதித்துள்ளனர்.
எனினும் இடதுசாரி கட்சிகள் இந்த மாற்றங்களுக்கு ஆழ்ந்த எதிர்ப்பைக் காட்டின.இந்த முடிவு அகதிகளுக்கு சாதகமாக இல்லை,என எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

உலகச்செய்திகள்