அதிகரித்துள்ள மூன்றாம் உலக போர் தொடங்கும் சூழல்

சிரியாவில் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராததால் மூன்றாம் உலக போர் தொடங்கும் சூழல் அதிகரித்துள்ளது. மூன்றாம் உலக போர் விரைவில் தொடங்கும் என பதற்றமான சூழல் உள்ள நிலையில் ரஷ்யர்கள் தயாராக வைத்து கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்து ரஷ்ய அரசு தொலைக்காட்சி நிலையம் விளக்கமளித்துள்ளது.

Rossiya-24 என்ற தொலைக்காட்சி நிறுவனம் தான் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. அதனால் வெடிகுண்டு மற்றும் அணுஆயுத முகாம்களில் ரஷ்யர்கள் அயோடின் சத்து கொண்ட உணவுகளை நிச்சயம் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கதிரியக்கத்திலிருந்து தங்களை பாதுகாக்க மக்கள் இதை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
பாஸ்தா, சொக்லேட், இனிப்பு வகைகளை தவிர்க்கவும் கூறப்பட்டுள்ளது, ஏனெனில் இனிப்பு வகைகளை சாப்பிட்டால் அதிகமாக தாகம் ஏற்படும் என்பதால் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகளவு தண்ணீரும், ஓட்ஸ் உணவுகளை நிறைய வைத்திருக்கவும், பவுடர் பால், சர்க்கரை, உப்பு, புட்டியில் அடைத்து வைக்கப்பட்ட மீன் உணவுகளை கையிருப்பு

வைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல முக்கிய மருந்துகளை வைத்திருக்க வேண்டிய அவசியம் குறித்தும் Rossiya-24 நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

உலகச்செய்திகள்