யாழ் தெல்லிப்பளை வைத்தியசாலையில்கர்ப்பிணி தாய்மார்கள் போராட்டம்

இன்றயதினம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கர்ப்பவதி தாய்மார்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குழந்தைநல மருத்துவர் இல்லாத காரணத்தால் சுமார் 12 குழந்தைகள் கடந்த காலங்களில் இறந்துள்ளதாக தாய்மார்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

போரட்டத்தின் முடிவில் வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாண சுகாதார அமைச்சர்,வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோருக்கான மகஜரும் வழங்கப்பட்டுள்ளது .

ஒருவார காலத்துக்குள் மருத்துவர் நியமிக்கப்படாதுவிட்டால் நிர்வாக முடக்க போராட்டத்தை முன்னெடுக்க போவதாக பாதிக்கப்பட்டவர்கள் அறிவித்துள்ளார்கள்

தாயகச்செய்திகள்