சுனாமி பேரலை போல் மேகம் இறங்கி சாலையில் கடுமையான வானிலை.!

கனடாவில் ஏற்பட்ட சுனாமி பேரலை போல் மேகம் விரைந்து வந்த வீடியோ காட்சி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கனடாவில், leavitt மாகாணத்தில் உள்ள airaton என்ற இடத்தில், குளிர்ந்த காற்று வீசும்போது சிறிய அளவிலான மேகக்கூட்டம் தரையில் இறங்கி வந்துள்ளது. சிறிது நேரத்தில் பெரும் மேகங்கள் திரண்டு சுனாமி பேரலை போல் தரை பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்தன.

இதனை அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் வீடியோ எடுத்து அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ மக்கள் மத்தியில் அதிகமாக பரவி வருகிறது. இந்த நிலையில், இன்று கனடாவில் நிலை மிகவும் மோசம். சாலை முழுவதும் ஐஸ், நடக்க முடியாத நிலையில், பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர். மேலும், சாலையில் நிற்கும் வாகனங்களை முழுமையாக மூடிய ஐஸ்.

மழையாக பொழியும் ஐஸ் கட்டிகள். கடுமையான வானிலையில் வாழும் மக்கள் பல புகைப்படங்கள், வீடியோக்கள் என்று எடுத்து வெளியிட்டு வருகிறார்கள். சில இடங்களில் அங்கு காய்த்து கிடைக்கும் மரங்கள், கீழ் நிற்கும் வாகனங்கள் மீது உடைந்து விழ தொடங்கியுள்ளது.

உலகச்செய்திகள்