இலங்கை தொடர்பில் பிரித்தானியா அதிருப்தி

இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ராயன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடிக்கும் வரையில் பேண்தகு சமாதானத்தை நிலைநாட்ட முடியாது என தமிழ் மக்கள் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நீதியை நிலைநாட்டுதல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் என்பன தொடர்பில் இலங்கை உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தொடர்ந்தும் ஒத்துழைப்பு வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ள பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ராயன் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்

உலகச்செய்திகள்